முகம் பார்த்து, தொலைபேசியில் கருத்து பதிவு செய்தல் தாண்டிய ஊடகங்கள் ஊடான கருத்துப்பதிவு இங்கே நாம் முக்கிய அவதானிப்பு செய்யப்பட வேண்டியது.
ஒரு கருத்து வெளிப்பாடு பின்வரும் காரணிகளின் அடிப்படையில் பல்லினத்துவம் அடையும் தகவுகொண்டது.
1. கருத்து வெளிப்படுத்தும் நபரின் சமூக வாழ்வுப் பின்னணி, அறிவு, ஆற்றல், ஆளுமை மற்றும் பொதுப்பண்பு
2. கருத்தை உள்வாங்கு நபரின் மனோநிலை மற்றும் குறித்த கருத்து சார்ந்த சமூக பார்வை, அனுபவ முதிர்ச்சி
3. உள்வாங்குனர் கருத்தாளர் மீது கொண்ட கண்ணோட்டம் மற்றும் அவர் மீதான தனி மற்றும் சமூக அவதானிப்பு மற்றும் விருப்பு வெறுப்பு
4. அணுகுமுறை ரீதியான உணர்ச்சிநிலை மற்றும் அறிவுபூர்வ பகுப்பாய்வு திறன்
இவைகளை தாண்டிய பொது அவை தளத்தில் விமர்சன ரீதியில் காணப்படும் கருத்து பல்வகைமையை மதிப்பளிப்பதோடு கருத்து சுதந்திரத்துக்கு இடமளித்தல் என்ற சமூக முதிர்ச்சி அவசியம்.
ஒரு கருத்து வெளிப்பாடு எப்போதும் நாம் நோக்கும் பார்வையில் அமையவேண்டும் என்று எதிர்பார்ப்பது எமது முட்டாள்த்தனம். இது ஜனநாயகத்திற்கு புறம்பானது. தனியன், குழு அல்லது குடித்தொகையின் அறிவு, ஆன்மிகம், ஆளுமை, அனுபவம் போன்ற பல்தரப்பட்ட பக்குவநிலையினால் வெளிப்பாடும் சமூகப்பார்வை வீச்சு மீடறன் எந்த அளவிற்கு வியாபிக்கின்றதோ அந்த அளவிற்கு நாம் குறித்த கருத்தியில் பின்னணியில் உள்ள மானிடர்களை பகுப்பாய்வு செய்யவேண்டியுள்ளது என்பதனை புரிந்துகொள்வதில் எம்மிடமுள்ள கருத்தாளுமை பண்பை விருத்தி செய்யமுடியுமாகும்...
No comments:
Post a Comment