சூப்பர் பாக்டீரியா என்றால் என்ன?
சூப்பர் பாக்டீரியா என்பது இப்போது நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் பரிணாம வளர்ச்சியடைந்த வகையாகும். இவ்வகையான பாக்டீரியாக்கள் multi-drug-resistant bacteria என்றும் Super-bug என்றும் ஊடகங்கள் மற்றும் மருத்துவர்கள் அழைக்கப்படுகிறதுது. இந்த பாக்டீரியாக்கள் இப்போது திடீரென உருவானவை கிடையாது.எப்போது மனிதனுக்குள் உயிரி எதிர்ப்பு மருந்து (ஆன்டி பயாட்டிக்) செலுத்தப்பட்டதோ அப்பொழுதிலிருந்தே இவைகளும் அந்த எதிர்ப்புமருந்துகளுக்கு ஏற்றவாறு தங்களை தகவமைத்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டன. இப்போது இவை ஓரளவு பலமடைந்து விட்டன என்றே கூறலாம்.

இவை சாதாரண பாக்கடீரியாக்களை விட அதிக எதிர்ப்புசக்தி கொண்டவை மட்டுமின்றி, இவை மனித உடலில் ஏற்படுத்தும் தாக்கங்களும் சாதாரண பாக்டீரியாக்களுடன் ஒப்பிடும்போது மிகவும் பயங்கரமாக இருக்கும்.அமெரிக்காவில் கடந்தசில வருடங்களில் ஆண்டுக்கு சராசரியாக 2 மில்லியன் மக்கள் சூப்பர் பாக்டீரியாக்களால் பாதிக்கப் பட்டுள்ளனர், இதில் 23000 பேர் இறந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் இதன் அளவு கூடிக்கொண்டே போகிறது என்பதும் கவனிக்க வேண்டிய விடயம்.இதற்கு சரியான மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படாததால் இவைகளை கட்டுப்படுத்துவது மருத்துவத் துறைக்கு பெரிய சவாலாக உள்ளது.
சூப்பர் பாக்டீரியா என்ற தனிப்பட்ட வகை பாக்டீரியா கிடையாது.மாறாக, மனிதனுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய அனைத்து வகையான பாக்டீரியாக்களும் பரிணமித்து சூப்பர்பக் (சூப்பர் பாக்டீரியா) என்ற வகைக்குள் வருகிறது.நாம் தற்போது பயன்படுத்தும் பெரும்பாலான நோய்எதிர்ப்புச் மருந்துகளை எதிர்க்கும் அளவுக்கு இவை வளரந்துவிட்டன. தற்போது நியூமோனியா, சிறுநீரக மண்டல தொற்று மற்றும் தோல் நோய் போன்றவை சூப்பர் பாக்டீரியாக்களால் ஏற்படுத்தப் படுகிறது. அவ்வப்போது இவைகளில் தாக்கத்தால் உயிரிழப்பும் ஏற்படுகிறது. எனவே, தற்போது நாம் பயன்படுத்தும் நோய் எதிர்ப்பு சிகிச்சைகள் எதிர்காலத்தில் பயனற்றுப்போகும்.
இவ்வகையான பாக்டீரியாக்கள் நமது உடலை பாதிப்பது மட்டுமின்றி, நமது உடலில் உணவை செரிப்பது, சிறிய நோய்க் கிருமிகளுடன் போராடுவது போன்ற செயல்களில் ஈடுபடும் நல்ல பாக்டீரியாக்களை அழிக்கின்றன.
சாதாரண பாக்டீரியாக்களில் தன்னுடைய பரிணாமம் அடைந்த DNA வை அனுப்பி அவைகளையும் சூப்பர் பாக்டீரியாவாக மாற்றுகிறது (Bacterial Conjugation)- கீழே படத்தில்.

சூப்பர் பாக்டீரியா உருவாவதற்கான காரணங்கள்:
👉 தவறான தடுப்புமருந்துகளைப் பயன்படுத்துதல்.
👉நோய்தொற்று பாதுகாப்பு செயல்பாடுகளில் போதிய விழிப்புணர்வு இன்றி இருத்தல்.
👉தூய்மையற்ற பகுதிகளில் குடியிருத்தல் அல்லது பணி செய்தல்.
👉தவறான உணவு பழக்கம்.
👉மருத்துவர்களின் மருத்துவ ஆலோசனைகளை அரைகுறையாக பின்பற்றுதல்.
👉தேவையற்ற நேரங்களில் மருந்துகளை கையாளுதல்.
👉மருந்தாளர்களின் ஆலோசனையின்றி மருந்துகளைப் பயன்படுத்துதல்.
👉இவற்றில் தவறான தடுப்பு மருந்துகளை பயன்படுத்துவதே இவைகளின் பெருக்கத்திற்கு முக்கிய காரணமாகும்.
முக்கியமான சூப்பர் பாக்டீரியாக்கள்:
1.Carbapenem-Resistant Enterobacteriaceae (CRE):
இவை மனித வயிற்றில் தங்கி தாக்குதலை ஏற்படுத்தும் பாக்டீரியாவாகும்.அனைத்து வகையான ஆன்டி-பயாட்டிக்குகளையும் எதிர்க்கக்கூடிய இவை உயிரையே பறிக்ககூடிய அளவுக்கு இரத்தத்தில் தொற்றுகளை உண்டாக்கும்.
2.Multidrug-Resistant Acinetobacter:
தண்ணீர் மற்றும் மண் ஆகியவற்றிலிருந்து தோல்மூலம் பரவும் இவ்வகையான சூப்பர் பாக்டீரியாக்கள் மற்ற சூப்பர் பாக்டீரியாக்களை விட மிக வேகமாக அவைகளுடைய எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. மருத்துவமனை ஆய்வுகளில் இந்த பாக்டீரியாவால் தாக்கப்பட்டவர்களே அதிகமாக அனுமதிக்கப் படுகிறார்களாம்.
3.Neisseria gonorrhoeae
இவை மிகவும் ஆபத்தான பால்வினை நோயான கொனேரியாவை பரப்பும் பாக்டீரியாக்களாகும்.நவீன உயிரி எதிர்ப்பு மருந்துகளைக் கொண்டு எளிமையாக குணப்படுத்தப்பட்ட இந்நோயை தற்போது இவ்வகை பாக்டீரியாக்களின் உருவாக்கத்தால் மிகவும் சவாலானதாக மாறியுள்ளது.
4.MRSA:
மிகவும் எளிதில் பரவக்கூடிய இவ்வகை பாக்டீரியாக்கள் தோல் மற்றும் சுவாச மண்டலத்தில் தொற்றுக்களை ஏற்படுத்தக் கூடியது . இருப்பினும் இவ்வகை பாக்டீரியாக்கள் இப்போது பயன்படுத்தப்படும் சில மருந்துகளால் அழியக்கூடியவையே.
5.Clostridium difficile (C.diff):
குடல்பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தும் இவ்வகையான பாகிடீரியாக்களின் பெருக்கம் கடுமையான வயிற்றுப்போக்கை ஏற்படுத்தக் கூடியது.இவ்வகையான பாக்டீரியாக்கள் பெரும்பாலும் தூய்மையற்ற கழிப்பறை மற்றும் தூய்மையற்ற உடைகளை அணிவதால் உடலினுள் நுழைகிறது.
இவைகளைத் தவிர்த்து இரத்தயேற்றம், உடல் திரவங்கள், பாதுகாப்பற்ற உடலுறவு,வியர்வை போன்றவற்றாலும் பரவுகிறது.
தடுக்கும் வழிமுறைகள்:
👉 தேவையான நேரத்தில் தேவையான மருந்துகளைப் பயன்படுத்துதல்.
நோயின் தாக்கம் குறைந்தாலும் மருத்துவர் அளிக்கும் மருந்தை முழுவதும் பயன்படுத்துதல்.
👉 உங்களுக்கு வழங்கப்பட்ட மருந்தை யாருடனும் பகிரக் கூடாது. மற்றவர்களுக்கு கொடுக்கப்பட்ட மருந்தை நீங்கள் அவர்களிடம் இருந்து வாங்கக் கூடாது.
துரித மற்றும் இரசாயனம் கலந்த உணவுகள் உண்பதைக் குறைத்தல்.
👉மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்துகளையும் உபயோகிக்கக் கூடாது.
சமீபத்தில் சூப்பர் பாக்டீரியாக்களை எதிர்க்கக்கூடிய மருந்துகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக கேள்விப்பட்டேன். இருப்பினும் மிகவும் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் இவைகளை முற்றிலுமாக அழிப்பதென்பது நடக்காத விடயம்.எனவே, இவைகளிடம் இருந்து காத்துக்கொள்ளுமாறு எதிகால சந்ததியினரை எச்சரிப்பதைத் தவிர வேறுவழியில்லை. ஏனெனில், இப்போது உருவாக்கப்படும் மருந்துகளையும் எதிர்க்கும் அளவுக்கு எதிர்காலத்தில் இவை வளர்ச்சி அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
No comments:
Post a Comment