
தன்னைத்தாண்டிய அரசியல் அதிகாரம் ஏனையவர்களுக்கு வழங்கப்படுத்தல் மற்றும் வளப்படுத்தப்படுத்தல் விடயத்தில் மிக அவதானமாகவும் அதற்கான திட்ட வியூகங்களையும் சிறப்பாக முன்னெடுத்து அதில் வெற்றியும் அடைந்துள்ளது மாவட்ட தலைமை கெளரவ MS Thowfeek.
பிரித்தாளும் சூழ்ச்சியில் முஸ்லிம்கள் வாக்கு வங்கி நிரம்பிய பகுதியை தொடர்ந்தும் மோதவிட்டு தனது அரசியல் அதிகாரத்தை தேசிய தலைமையுடன் கடந்த 2 தசாப்தங்களாக நிலைநாட்டி வருவது யாவரும் அறிந்த விடயம். மூதூரில் விதைக்கப்பட்ட உயிர் தியாகம் ஊடாக எந்தவொரு அரசியல் அனுபவமும் அறிமுகமும் இல்லாமல் மூகா கட்சியில் நுழைந்து அனுதாப வாக்கு மூலம் குறிப்பாக 50% விட அதிகமாக மூதூர் மக்கள் அளித்த வாக்கு மூலமாக பாராளுமன்ற அதிகாரத்தை பெற்ற இவர் தொடர்ந்து வந்த மூன்று பாராளுமன்ற தேர்தலில் தேசிய தலைமையின் ஆதரவுடன் கிண்ணியா வாக்கு வங்கியை தக்கவைக்கவேண்டும் என்ற ஒரே ஒரு குறிக்கோளுடன் தேசியப்பட்டியல் அதிகாரம் அளிக்கப்பட்டு துரோக அரசியல் மோசடியையும், வாக்கு மாறும் நயவஞ்சக அரசியலையும் மூகா கட்சியின் தேசிய மற்றும் மாவட்ட உயர்பீடம் மாவட்ட ஏனைய முஸ்லிம் ஊர்களான மூதூர், கந்தலாய், புல்மோட்டை, குச்சவெளி போன்ற பிரதேசங்களில் நிலைநாட்டியுள்ளது.
இந்த நகர்வை சாதுரியமாக பயன்படுத்திய ACMC மாவட்டத்தில் மிக குறுகிய காலத்தில் பலமான ஒரு கட்டுமானத்தை உண்டாக்கியது. இதற்கு வலுவூட்டும் வகையில் அண்மைக்கால SLMC கட்சியின் முக்கிய அரசியல் ஆளுமைகள் கட்சியை விட்டு விலகியமை சிறந்த எடுத்துக்காட்டு.
எதிர்நோக்கி இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் மாவட்ட அறிமுகம் இல்லாத ஒரு டம்மி வேற்பாளரை கடந்த காலத்தில் நிலை நிறுத்தியதுபோன்று இம்முறையும் ஒருதொகை பணத்திற்கு (1M) மொத்த மூதூர் மக்களின் 15 வருடங்கள் மேலான அபிலாசைக்கு சாவுமணி அடிக்கப்பட்டுள்ளது. இதற்கு வெறுமனே மாவட்ட, தேசிய தலைமை மட்டும் காரணம் என்று சாடிவிடமுடியாது. இதற்கு பிரதான காரணம் மூதூர் மூகா மத்தியகுழு மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் கெளரவ JM. laheer அவர்களும். மிக அருமையான சந்தர்ப்பத்தை தனது மாகாணசபை அறிமுகத்திற்கு பயன்படுத்தி மாவட்டம் தழுவிய அறிமுகத்தோடு நல்லதொரு பரீட்சாத்த களத்தையும் இந்த பொதுத்தேர்தலை பயன்படுத்தி நல்லதொரு வாக்கு வங்கி நிரப்பும் தந்துரோபாய உத்தியை மேற்கொள்ள முயற்சித்து இருக்கலாம்.
இவை அனைத்துக்கும் அப்பால் முஸ்லிம் வாக்கு வங்கியை தக்க வைப்பதில் உள்ளூர் கட்டமைப்பில் பிளவையும் கருத்து முரண்பாடு, அதிகார சமத்துவம் மற்றும் இதர கொந்தராத்து முரண்பாடுகளின் உள்ளூர் மூ.கா கட்சி ஆர்வலர்கள் மற்றும் ஆளுமைகளுக்கு இடையில் விரிசலை உண்டாக்கு தான் எல்லோரும் நல்லவர்போல் பாசாங்கு செய்து தனது மாவட்ட அதிகார ஆசனத்தை தக்கவைப்பதில் பெரும் பங்குண்டு.
மூதூர், புல்மோட்டை மாகாணசபை அரசியல் ஆளுமைகளான லாஹீர், அன்வர் போன்றவர்களின் எதிர்கால மாகாணசபை வியூகங்கள் இன்றே முன்னெடுக்கப்பட வேண்டும். இதனை அந்த நபர்கள் சார்ந்து இருக்கும் ஊர் மக்கள் விழிப்படைந்து குறித்த அதிகாரத்தை எதிர்காலத்தில் தக்கவைத்து அதனூடாக 2025 இல் போதுத்தேர்தலுக்கு தயாராகவேண்டும். குறித்த மாகாணசபை வெற்றிடத்தை மீள் நிரப்பும் வகையில் நல்ல ஆளுமையை அடையாளம் கண்டு அவர்களையும் வலுப்படுத்த வேண்டும். இதற்கு ஊர் சார்ந்த சூரா கட்டமைப்பினதும் ஏனைய கட்சியின் அபிமானிகளினதும் ஆதரவு ஒன்று குவிக்கப்படவேண்டும்.
என்னதான் விழிப்புணர்வு , விமர்சனம் எழுதப்பட்டு மக்களை சென்றடைய வைத்தபோதும் உள்ளூர் பினாமிகள் கட்சியின் தேசிய தலைமையை ஒளலியா நிலைக்கு மதிப்பளிக்கும் நிலை மாறாதவிடத்து இங்கு எதுவும் மாறிவிடப்போவதில்லை. எமது வாக்கு வங்கியில் சுகபோகம் அனுபவிக்கும் அவ்வாறான கட்சி தலைமைகளுக்கு ஏன்தான் இங்குள்ள பினாமிகள் அவ்வளவு வால்பிடிக்கிறார்களோ எனக்கு உண்மைக்கும் தெரியவில்லை.....
மாற்றீடு அரசியல் மற்றும் பங்கீட்டு அரசியலே இதற்கான சிறந்த தீர்வாகும். புதிய அரசியல் அமைப்பு தொடங்கப்பட்டு பேரம்பேசும் சக்தியை தம்வசப்படுத்தும் திட்ட வியூகங்களையும் உள்ளூர் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சூரா சபை தலைமையில் கட்டமைப்பு செய்யவேண்டிய நிலைக்கு இன்றுள்ள காலமும் களமும் சிறந்த வாய்ப்பாகும்.
புதிய தலைமுறைகளை கொண்டு மீள் ஒழுங்குபடுத்தலூடாக அரசியல் அதிகாரம் அடைந்துகொள்ளும் வியூகங்களை சமூக சிந்தனையோடு முன்னெடுக்கட்டும்....

மேலதிக வாசிப்புக்கு - மூதூர்
👉 மூதூர் - 103,197 (2 பிரதிநிதிகள்)
👉 திருகோணமலை - 90, 881 (1 பிரதிநிதி)
👉 சேருவில - 72,888 (1 பிரதிநிதி)
👉 தபால் மூலம் - 14,148
👉 மொத்தம் - 281,114 (4 பிரதிநிதிகள்
அளிக்கப்பட வாக்குகளின் அதிகூடிய வாக்கு பெரும் போட்டியாளர் பாராளுமன்ற பிரதிநிதியாக தேர்வு செய்யப்படுவார்.
மூதூர் மண்ணில் இருந்து இதுவரைகாலமும் தீடிர் தௌபீக், துறைரட்னசிங்கம் ஆகிய பாராளுமன்ற பிரதிநிதிகளே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மூதூர் தொகுதியில் கிண்ணிய, மூதூர், தோப்பூர், சம்பூர், சேனையூர் போன்ற முக்கிய உள்ளடங்கும். மூதூருக்கான பாராளுமன்ற பிரதிநித்துவம் பற்றிய கோரிக்கை மீதான மீள்வாசிப்பு மிக நீண்டகாலமாக மூதூர் மண் கிண்ணியா பிரதிநிதிகளின் சேவையில் தான் தங்கி நின்றுள்ளது. இந்நிலைமையின் கீழ் மாகாணசபை வகிபாகம் பல உள்ளீர் தேவைப்பாடுகளையும் சில உள்ளார்ந்த பிரச்சினைகளின் போதான அழுத்தங்களை அண்மைய ஆண்டுகளாக நிவர்த்தி செய்தபோதும் தேசிய ரீதியான அபிவிருத்தி மட்டும் உட்கட்டமைப்பு பெரும் மாற்றங்களில் பாரிய வெற்றிடம் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது. மேற்கோளாக காணிப்பிரச்சினை தொடக்கம் கல்வி சார் கட்டுமான தேவைப்பாடுகள் வரைக்கும் மிக நீண்ட கால முடிவுகள் பாராளுமன்ற அதிகாரத்தினை சார்ந்துள்ளதனால் மூதூர் மண்ணுக்கான மண்ணின் பிரதிநிதி பற்றாக்குறை அத்தியவசியப்பாட்டை உணர்துள்ளது இம்மண்ணும் மக்களும்... அந்தவகையில் தங்களின் பிரதிநிததி பற்றிய கோசமும் எண்ணக்கருவும் விஸ்வரூபம் அடைந்துவரும் நிலையில் எவ்வாறான முன்னெடுப்புகள் மற்றும் அதற்கான தயார்படுத்தல் பற்றிய கண்ணோட்டத்தினை இம்மக்கள் முறையாக கையாள்கின்றார்களா என்பதே இங்கே அவதானிக்கவேண்டிய முக்கிய புள்ளி...
1. https://en.wikipedia.org/wiki/Trincomalee_Electoral_District
2. https://elections.gov.lk/…/en/elector-registration-statist…/
3. http://www.swarnavahini.lk/…/presidential-election-20…/mutur
4. https://elections.gov.lk/web/en/trincomalee-district/
No comments:
Post a Comment