
பிரபஞ்ச வெடிப்பின் போது உடனடியாகவே விண்மீன்களோ கோள்களோ தோன்றவில்லை. வெடிப்பின் பின்னமைந்த உடனடியான காலகட்டத்தில் பிரபஞ்ச விரிவாக்க மாற்றத்தின் பல முக்கிய படிமுறைகள் தோன்றின ஆனால் அவை எல்லாமே இந்தக் கேள்விக்கான பதில்கள் அல்ல. வெடிப்பின் பின் ஒரு 370,000 ஆண்டுகள் வரையிலான காலப்பகுதியில் அடிப்படைத்துகள்கள் கூட உருவாகியிருக்கவில்லை.
வெடிப்புக்கணத்தை அடுத்து வெப்பநிலை ஒரு பில்லியன் பாகைளுக்கும் அதிகமாக இருந்தனால் அங்கே (ஈர்ப்பு, மின்காந்த விசை, மெலிய அணுவிசை, வலிய அணுவிசை என்னும்) நான்கு அடிப்படை விசைகளும் இணந்து ஒரே ஒரு விசையாகவே தோற்றமளித்தன

(இந்த ஐக்கியத் தோற்றப்பாடுக்கான வகைமுறை என்ன என்பது இன்றைய இயற்பியல் ஆராய்ச்சியின் இறுதி நோக்கமாகும். அவர்கள் அத்னைச்செய்து முடித்தால் அதனை ஐக்கியவெளித் தத்துவம் (United Field Theory) என்று பெயர் சொல்லி அழைப்பார்கள். எட்வர்ட் விற்றன், ஸ்டீபன் ஹோக்கிங்க், பீட்டர் ஹிக்ஸ், ரிச்சர்ட் ஃபெய்ன்மன் பொன்றோர் தம் கவாழ்க்கயைக்கொண்டு போய் முதலிட்டது இந்த ஆய்வுக்குள் தான், அதுபோகட்டும்)
ஆனால் இந்த விசைகள் கூட அங்கேயிருந்த அந்தச் செறி குழம்பைத் தாண்டி வெளியேற முடியவில்லை. இன்று நாம் CMBR (Cosmic Microwave Background Radiation) என்று காணும் சக்தி வெளிப்பாடு இந்த ஆதி நாட்களில் ஒரு Orange Glow ஆக வெளி வந்தது பிற்பாடு குளீர்ந்து CMBR ஆக மாறிவிட்டது. ஆக மொத்தம் பிரபஞ்ச வெடிப்பு என்று ஒன்றிருந்தது என்பதற்கான முதல் அடியாளம் அந்தக் குழம்புக்குள்ளிருந்து வெளியேற ஒரு 370,000 ஆண்டுகள் பிடித்தது
இப்போது நாம் இவ்வளவோடு இந்த வெடிப்புப் பற்றிய கதையை இடைநிறுத்தி நாம் வந்த வேலையான ஆரம்ப கால நட்சத்திர உருவாக்கத்துக்குப் போவோம்
வெடிப்பின் முதலில் அடிப்படைத்துகள்களூம் பின்னர் புரொட்டோன் நியூட்ரோன் போன்ற பரியோன் துகள்களூம் உருவாகின. இவை வேகமாக விரிந்துகொண்டு போன போதே சுருண்டு உருவான திரட்சிகளில் Population III என அழைக்கப்படும் ஆரம்ப கால நட்சத்திரங்கள் உருவாகின இது இடம்பெற ஒரு 100 மில்லியன் ஆண்டுகளூக்கு மேலாயிற்று. அந்த நாட்களில் நேரடியாகத் தோன்றிய நட்சத்திரங்களுக்கும் இந்நாட்களில் கலக்சிகளிலுள்ள முகில்களிருந்து தோன்றும் நட்சத்திரங்களுக்கும் (Population I) அடிப்படை உருவாக்கலில் வேறுபாடுகள் உண்டு.
புதிதாக விரிந்து கொண்டு வரும் Spacetime ஐ வெகுவேகமாகத் துளைத்துச் சென்ற பரியோன் துகள்கள் முதலில் ஹைட்ரஜன் அயன்களையும் ஹீலியம் அயன்களையும் தந்தன. ஒன்றுடனொன்று மோதித் துவண்டு திரண்ட இந்த அயன்ள் இராட்சத நட்சத்திரங்களை உருவாக்கின. இந்தப் Population III ஆரம்ப நட்சத்திரங்கள் எமது சூரியனைப் போல் 100 - 400 மடங்கு வரை பெரியவையாக இருந்தன அதனால் அவை ஐதரசன் இணைப்பில் வெகு கடுமையாக எரிந்தன. இவ்வாறு சில மில்லியன் ஆண்டுகளிலேயே எரிந்து முடிந்தன. அவை உருவாகும் போது உட்சென்றவை ஹீலியமும் ஹைட்ரஜனும் மட்டும் தான். அவை எரிந்து முடிந்து வெடித்த அந்த அதியுன்னத வெப்பத்திற் றான் இன்றுவரை பிரபஞ்சத்தில் இருக்கும் பார உலோகங்கள் (தங்கம், பிளாட்டினம், யூரேனியம் இன்னும் பல) தோன்றின.
இந்த ஆரம்பகால நட்சத்திரங்கள் மட்டும் தான் பிரபஞ்சத்தில் பாரமூலகங்களைத் தந்தவை. இவை ஹைப்பர்நோவாக்களாகி (HyperNova) வெடித்த போது உருவான முகிற்கூட்டங்களின் வேதியியல் அமைப்பு வெடிப்பைத் தந்த (Population III) நட்சத்டிரங்களை விட முற்றிலும் மாறுபட்டே இருந்தன. பிற்பாடு வெடித்த நட்சத்திரங்களுக்கு பாரமூலகங்களைப் பெருமளவில் உருவாக்கும் சக்தி இருக்கவில்லை.

நீங்கள் உங்கள் கேள்வியில் விண்மீன்களும் கோள்களும் என்று சொல்லும் போது இந்த ஆரம்ப கால நட்சத்திரங்கள் அந்த நடைமுறைக்குள் வரமாட்டா. ஆரம்பகால நடைமுறைகள் மிகவும் வன்முறையானவை. அந்த நட்சத்திரங்கள் ஒவ்வொன்றாகவும் தனித்ம்தனியாகவும் தோன்றியிருக்கலாம். இப்போதென்றால் நட்சத்திரங்கள் உருவாகவென்று ஒரு Maternity Ward கூடக் கிடைக்கும்! Population III நட்சத்திரங்கள் எரிந்து வெடித்த போது உருவான இராட்சத முகிற்கூட்டங்கள் ஒவ்வொன்றும் பல இலட்சம் நட்சத்திரப் பருமன் கொண்டவை.
இவை இணைந்தபோது அமைப்புக்கள் (Structures) என்று சொல்லப்படும் விவரிப்பிலடங்காத இன்னும் பெரியமுகிற்கூட்டங்கள் உருவாயின இப்படியான முகில்களைக்கொண்ட இரு வேறு கலக்சிகள் ஒன்றை யொன்று அண்மிய போது இந்த முகில்கல் ஒன்றியொன்று மோதின. அங்கே பட்டாசு வெடிப்புக்களோடு ஒரே தடவையிற் பல நட்சத்திரங்கள் உருவாயின. இந்தப் பிற்கால நட்சத்திரங்களை நாம் Population I நட்சத்திரங்கள் என்கிறோம் தற்கால நட்சத்திர உருவாக்கல் பற்றிய ஒரு மிகச்சரியான விவரிப்பென்று நாம் இதனைக் கூறலாம். ஒரு ஹைப்பர்நோவா வெடிப்பினாலானாலும் சரி பிற்காலச் சுபர்நொவா வெடிப்பினாலானாலும் சரி இருந்து வெளிவந்த இந்த முகில்களும் வாயுக்களும் கூடச் சுழன்று கொண்டேயிருக்கும். இவற்றினுள்ளே ஏர்படும் மின்னமுக்க மற்றும் ஈர்ப்பமுக்க வேறுபாடுகள் காரணமாக இங்கே ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்கள் உருவாகலாம்.
இவ்வாறு வெடிப்பிலிருந்து பிரபஞ்சம் உருவாகிய கதை பழங் கதையாகிப் போய்விட்ட நாட்களில் 4- 6 பில்லியன் ஆண்டுகளின் பின்னால் இப்படி ஒரு முகிற்கூட்டத்திலிருந்து சூரியன் உருவாகியது. முதலில் அங்கே சுழன்று கொண்டிருந்த தூசிகளும் வாயு மூலக் கூறுகளும் திரண்டு ஒரு பெரிய சூரியத்தட்டாகின. தட்டின் சுழல் வேகம் கூடக்கூட மையத்தில் ஏற்பட்ட திரள்வே முற்சூரியன் என்ற நட்சத்திரமுதலாக மாறியது. 9 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த சூரியத் தட்டிலிருந்து சூரியஉருவாக்கற் திரள்வுச் செயற்பாடு முடிந்ததும் எஞ்சியிருந்த தட்டில் இருந்து இன்னொரு 4. 5 பில்லியன் ஆண்டுகளூக்கூப்பின்னால் கிரகங்கள் உருவாகலாயின. சூரியனைச் சுற்றிக் கொண்டிருந்த தட்டில் எல்லா மூலகங்களும் மூலக்கூறுகளூம் ஒரே மாதிரியான வகையிற் பரப்பப் பட்டிருக்கும் என்று சொல்வதற்கு இல்லை. தட்டின் உட்பகுதியில் பாரமாகவும் செறிவாகவும் வெளிப் புறத்தில் ஐதாகவும் இருக்கலாம். .அன்றியும் தட்டின் நடுப்பாகம் தடிப்பாகவும் இரண்டு விளிம்புகளும் சற்றே மெலிந்தும் இருக்கலாம்.
வேகமாகச் சூற்றும் பாரமான துகள்கள் இன்னும் வேகமாக சுழலும் வாயுவுக்கு எதிராக மோதும் போது ஏற்படும் இழுவையினால் (Drag Force) கோள்கள் உருவாகின்றன. இப்போது உங்களுக்குச் சில விடயங்கள் தெளீவாகப் புரிந்திருக்கும். வெடிப்பின் போது உருவான சக்தி வேறு; அவை ஒரு 100 மில்லியன் ஆண்டுகளில் உருவாக்கிய நட்சத்டிரங்கள் வேறு; 800 மீலியன் தொட்டு ஒரு பில்லியன் ஆண்டுகளின் பின்னால் அவற்றின் வெடிப்பிலிருந்து உருவாகிய நட்சத்டிரங்கள் வேறு; அதன் பின் 4-5 பில்லியன் ஆண்டுகளின் பின்னால் உருவான சூரியன் வேறு; சூரியனிலிருந்து இன்னும் . 4.5 பில்லியன் ஆண்டுகள் கழித்து உருவான கோள்களின் உருவாக்க நடைமுறை வேறு என்கிற இவை உங்களுக்குப் புரிந்திருக்கும்.

இவ்வாறு தோன்றிய கோள்கள் அதன் பின்னரும் மாற்ரங்களைச் சந்திக்க நேர்கிறது. இங்கே நடுவில் உள்ள முற்சூரியன் என்கிற நட்சத்திரமுதலின் திண்மை வெகுத்ததனால் அதன் மையத்தில் நெரிவு உண்டாகி ஐதரசன் இணைவினால் (Fusion) சக்தி வெளிப்படும். இந்த் சக்தி சுற்றிலுமுள்ள கோள்களில் இருக்கும் வாயுக்களை ஆவியாகி அண்டவெளிக்குள் தப்பவிடும் கோள்கள் பெரிதாக இந்தால் அவற்றின் ஈர்ப்ப்புச்சக்தி இந்தவிதமான வெளீயேற்றத்தைத் தடுக்கும். . கோள்கள் சிறியவையாகவும் இருந்து சூரியனுக்கு அண்மயிலும் வந்தமைந்தால் கொதித்து வெளீயேறும் வாயுக்களைப் பிடித்து வைத்திருக்கும் ஈர்ப்பு ஆற்றல் குறைந்திருக்கும்.
சூரியனிலிருந்து சற்றுத் தூரரமாகவும் பெரிதாகவும் இருக்கும் வியாழன் போன்ற கோள்கள் அவற்றில் இருக்கும் பெருந்திண்மை காரணமாகச் சூரியவெப்பத்தால் வெளியேறும் வாயுக்களையும் தடுத்து நிறுத்திச் சூரியமண்டலத்தில் பரவி இருக்கும் வாயுக்களையும் இழுத்துத் தனதாக்கிக் கொள்கின்றன. இப்போது ஒப்பிட்டுப்பாருங்கள்: வெறும் பாறைகள் மட்டுமாக இருக்கும் புதன், அளாவான வாயுக்களோடு அழகாக வாழும் பூமி இழுத்தெடுத்த வாயுக்கள் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கும் வியாழன் ஆகிய மூன்றையும் ஒப்பிட்டு இவை மூன்றும் ஒரே தட்டில் இருந்து தானே உருவாகின அன்று நீங்கள் அதிசயப் பட்டால் சூரிய வெப்பமும் கிரகங்களிம் ஈர்ப்பு விசையும் செய்கிற் விந்தை தான் இது என்று என் பதில் வரும்
நான் இங்கே கூறியிருக்கும் சூரியன் மற்றும் கோள்களின் உருவாக்கம் பற்றிய விவரிப்பு ஒரு OVERSIMPLIFICATION. பல விபரங்கள் தவறவிடப் பட்டிருக்கும். ஆனால் அவை உங்களுக்குத் தேவைப்படமாட்டா.
இப்போது நான் POPULATION I நட்சத்திரங்களின் இலகுவக்கப்பட்ட உருவாக்தை இங்கே நிரல் படுத்துவேன்
👉 விண்மீன் திரள் என்னும் கலக்சிகளில் வாயு முகில்கள் உருவாகின்ரன
👉 வாயு முகில்கள் திரண்டு கட்டமைப்புக்கள் (Structures) தோன்றுகின்றன. கட்டமைப்புக்கள் (Structures) என்பன மிகமிகத் திரண்ட முகில்களாகும்
👉 தொடரறுந்த (Intermittent and random) வாயுக்குழப்பங்களால் திண்மம் திரண்டு அடர்த்தி கூடுகிறது
👉இந்தத் திரள்வு தட்டையாகி "protostar" நடுவில் உருவாகிறது
👉 இரு துருவ உருவாக்கல்களினால் ஒரு நட்சத்திரமுதலும் அதைச் சுற்றி ஒரு தட்டும் என்றாகிறது
👉 நட்சத்திர நடுவில் ஐத்ரஜன் இணவு ஏற்பட்டுச் சக்தி உருவாகிரது.
👉 நட்சத்திர வளர்ச்சி முடிவடைந்ததும் எஞ்சிய தட்டு நட்சத்திரத்தைச் சுற்றிச் சுழல்கிறது
👉 இந்தத் தட்டிலிருந்து பலவிதமான கோளங்கள் உருவாகின்றன.
👉 இதன் பின்னரும் எஞ்சியிருப்பவை எரிகற்கள் கொண்ட தட்டுக்களாகின்றன.
👉 பிரபஞ்ச வெடிப்பின் ஆரம்ப நாட்களில் உருவாகும் POPLATUON 3 நட்சத்டிரங்கள் இப்படிச் சிக்கலான பொறிமுறையிலானவையல்ல இங்கே கோல்கள் உருவாகும் பேச்சுக்கே இடமில்லை...
"நட்சத்திர மண்டலங்களின் மீது நான் சத்தியம் செய்கிறேன்" (அல்-குர்ஆன் 56:75)
No comments:
Post a Comment