இந்த நிகழ்வு எல்லாருக்கும் நடக்குற ஒன்னுதான். பள்ளிக்கூட காலத்துல பசங்களோட முழங்கை எலும்புல சுண்டிவிட்டு விளையாடுவோம் 😄. நான் அப்டியே ஷாக் ஆயிட்டேங்குற ரியாக்ஷன் அப்ப வரும் 😄.
நான் ஏதாவது முக்கியமான வேலை செஞ்சிட்டிருக்கும் போது எங்கயாவது கைமுட்டிய இடிச்சுக்குவேன். ஷாக் அடிக்கிறதோட இல்லாம பைனலா அப்டியே சூடாகும். ஏதோ நெருப்ப கையில எடுத்த மாதிரி இருக்கும்.
சரி இனி பதிலுக்கு வருவோம்..,
வேடிக்கையான எலும்பு (Funny Bone):
இந்த இடம் Funny Bone என்று அழைக்கப்படுகிறது.
இந்த "எலும்பு" உண்மையில் உல்நார் நரம்பு (ulnar nerve) என்று அழைக்கப்படும் ஒரு நரம்பின் நீண்ட கொடியாகும். இது நமது கழுத்திலிருந்து தொடங்கி, தோள்பட்டை, பைசெப்ஸ்(Biceps) முன்கை ஆகியவற்றின் மூலம், மணிகட்டுக்குள் நுழைந்து இறுதியாக மோதிர விரலின் பாதியில் மற்றும் சுண்டுவிரலில் முடிவடைகிறது. நீண்டு செல்லும் இந்த நரம்பு காணப்படும் பகுதி 'உல்நார்' என்றும், நரம்பு "உல்நார் நரம்பு" என்றும் அழைக்கப்படுகிறது. இதன் கூர்மையான, நீடித்த விளிம்பு முழங்கையின் எலும்போடு இணைந்து சற்று கீழ்ப்புறமாக செல்கிறது. உல்நாருடன் பூட்டப்பட்ட எலும்பு ஹியூமரஸ் ஆகும். இது நமது முழங்கைக்கு மேலே உள்ள எலும்பு ஆகும்
படவிநயம்: AAOS

நம் உடலில் உள்ள ஒவ்வொரு நரம்பும் தசைகளால் மூடப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. உல்நார் நரம்பின் நிலைமையும் அப்படித்தான். இது நமது பைசெப்ஸ், முன்கை, மோதிர விரல் மற்றும் சுண்டுவிரல் போன்றவற்றில் தசைகளால் பாதுகாக்கப்படுகிறது. ஹியூமரஸ்க்கும்(humerus) முன்கைக்கும் இடையில் ஒரு வெற்றிடம் உள்ளது, இது கியூபிடல் சுரங்கம்(cubital tunnel) என்று அழைக்கப்படுகிறது. இந்த கியூபிடல் நரம்பு எளிதாக பாதிக்கப்படக்கூடியது. எப்படியெனில் இது கியூபிடல் சுரங்கப்பாதை வழியாக செல்லும்போது, அது தோல் மற்றும் சில கொழுப்புகளால் மட்டுமே பாதுகாக்கப்படுகிறது.
நாம் தெரியாமல் எங்காவது இடித்துக்கொள்ளும் போது இந்த பாதுகாப்பற்ற நரம்பு, எலும்போடு சேர்த்து அழுத்தப்படுகிறது. இதனால் அழுத்தப்பட்ட உல்நார் நரம்பு வலியின் அலைகளைத் (waves) தூண்டி “மின்சார அதிர்ச்சியை” வெளியிடுகிறது. இவ்வாறு ஏற்படும் மின் அதிர்ச்சியானது நரம்பின் மற்ற பகுதிகளுக்கும் கடத்தப்படுகிறது. அதாவது, முழங்கை பகுதியிலிருந்து முன்கை, மோதிரவிரலின் பாதி, சுண்டுவிரல் வரை இது கடத்தப்படுகிறது.
இதன் தாக்கம் அதிகமாக இருப்பின் அது கியூபிடல் டன்னல் சிண்ட்ரோம் என அழைக்கப்படுகிறது. அது குறித்து அடிக்குறிப்பில் உள்ள தளத்தில் சென்று அறிந்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment