ஒரு சமூக நடப்பில் அக்கால தர்க்கவியலாளர்கள், சிந்தனைவாதிகள் மற்றும் முதிர்ச்சி நிலை அனுபவசாலிகள் வெளிப்படுத்திய வெளிப்பாடுகள்தான் இன்றளவும் சில சமூகங்களின் வாழ்வியல் விதிமுறை வரையறையாக பின்தொடரப்படுகின்றது. உலகளாவிய பண்பாட்டு, மானிட மற்றும் சமூக வாழ்வியலையும் அதனோடு தொடர்பான ஒழுக்க வழிமுறைகளையும் வரையறை செய்ததில் புனித அல்குர்ஆனின் பங்கு எக்காலத்திலும் முதல்நிலை பெற்றுவிடுகின்றது. இதே சமயம் பகுத்தறிவு வாதம் சார்ந்த பொதுவெளி உரையாடலையும் இந்த அல்குர்ஆனே தூண்டுகின்றது.
அறிவியல் என்பது இறையியலை அடைந்துகொள்ளும் ஒரு வழிமுறையே தவிர அது இறையியலை குருடாக்கும் ஒரு தளமல்ல என்பதை அறிவியலில் முன்னேறிய மனித வளங்கள் புரிந்துள்ளார்கள்.
என்றாலும்... சில்லறை வாசிப்பாளர்கள், தேடலாளர்கள் போன்றவர்களின் முதிர்ச்சியற்ற அறிவியல் அறிவு இறையியலை மறுப்பது ஆச்சரியப்படுவதற்கு இல்லைதான். இதற்கு மாறாக இறையியல் ஆற்றல்களையும் வெளிப்பாடுகளையும் கண்மூடித்தனமாக சாடுவதும் ஒருவகை மடமை சித்தாதமே தவிர வேறில்லை...
சாவியும் உண்டு, பூட்டும் உண்டு
ஆனால் அதனை எவ்வாறு தேர்ந்தெடுத்து எப்போது உபயோகம் செய்வத்தில்தான் அதன் முழுமை ஆற்றலை உணர்ந்துகொள்ளமுடியும்.
No comments:
Post a Comment