
இது எப்படி சாத்தியமாக முடியும்? முகநூல் என்பது சகல தரப்பினரையும் உள்ளடக்கிய பெருவெளி.. மாற்றுக் கருத்தாளர்களையும்.. பல்வேறு அறிவுத் தரத்தில் உள்ளோரையும் ஏற்று மதிக்கிற சூழலை தருகிற ஒரு வெளி..
பாமரர்கள் ( இந்த சொல்லை பாவிப்பது சங்கடமாக இருக்கிறது), அறிவுத் தரத்தில் பின் தங்கி இருப்பவர்கள் என்று நாம் அவர்களின் முகநூல் பதிவுகளை வைத்து கருதுவோராக இருந்தால் அவர்களுக்கு அறிவூட்டும் பணியை.. நாம் உயர்வாக கருதிக் கொண்டிருக்கும் சிந்தனைகளுக்கு உள்ளேயிழுக்கும் வழியை அவர்களுக்கு காட்டித் தர வேண்டும்.. அப்பணியை உரிய முறையில் செய்ய வேண்டும்.. அதை விடுத்து அவர்களை கொச்சைப்படுத்துவதும்.. புறக்கணிப்பதும் புத்திஜீவித்துவ அடையாளம் கொண்டவர்களுக்கு அழகல்ல.. இவர்களே கருத்துரிமை பற்றி பேசுபவர்களாக இருப்பதும் ஆச்சரியமானது..
"கற்றவர்களும் கல்லாதவர்களும் சமமாவார்களா" என்ற குர்ஆனியக் கேள்வியும்..(கல்லிமின்னாச அலா கத்ரி உகூலிஹிம்) "மக்களுடன் அவரவர் அறிவு தரத்திற்கேற்ப உரையாடுங்கள்" என்ற நபிமொழியும் அனைத்து மக்களும் சம அறிவுத் தரத்தில், சிந்தனைத் தளத்தில் இருக்க முடியாது என்பதை சுட்டுகிறது..
இதுபோக " நீ சொல்லும் கருத்துடன் எனக்கு உடன்பாடு இல்லையாயினும் அதைச் சொல்ல உனக்கு இருக்கும் உரிமைக்காக இறுதிவரைப் போராடுவேன்" என்ற மிகப்பிரபலமான வோல்ட்டாயரின் கூற்றோடு நாம் களமிறங்குவது எப்படி சாத்தியமாகும்?
நாம் அறிவு, சிந்தனை தளத்தில் வேறுபட்டு மேம்பட்டவராக இருக்கிறோம் என்பதற்கான அடையாளப்படுத்தல் காரணிகள் இவ்வாறான பாமர மற்றும் சிந்தனைத் தேக்கத்தில் இருப்பவர்களாலேயே உருவாகின்றன என்பதும் உண்மைதானே..!?
"கற்பவனாக இரு,
கற்றுக் கொடுப்பவனாக இரு,
கற்பவர்களுக்கு உதவி செய்பவனாக இரு..
ஆனால் இதல்லாத நான்காமவனாக இருந்து விடாதே" என்ற நபித்துவ வழிகாட்டலுக்கு ஏற்ப ஒவ்வொருவர் கருத்துக்களை நல்ல முறையில் மதித்து கற்கவும், கற்பிக்கவுமான முன்மாதிரியான நடவடிக்கைகளை இந்த முகநூல் வெளியிலும் செய்வோம்..
No comments:
Post a Comment