
முன்மாதிரி அரசியல் கலாசாரம் நோக்கி முற்போக்கோடு முயலும் நாம் அதற்கான அஸ்திவாரத்தை எம்மிலிருந்தே தொடக்கி வைப்பதுதான் மிகப்பாரிய சமூக அதிர்வுகளை உண்டாக்கும். இங்கே கட்சிகள், தன்நலம், நம்பிக்கை துரோகங்கள் அற்ற பொதுநிலை சிந்தை கிரகிப்பு மற்றும் வெளியீடுகள் செயலாற்றுகைக்கு முதலீடாக்கப்பட வேண்டும்.
துரதிஷ்டம் என்னவென்றால்
இன்று சமூக அரசியல் பேசும் பலர் தங்களின் பின்னணியை வேலை வாய்ப்பு, பணம், சமூக அந்தஸ்து மற்றும் அதிகார அரவணைப்பு போன்றவரை நோக்கமாக கொண்டுள்ளார்கள். இவ்வாறான தொண்டர்களினால் எப்போதுமே கனதியான சமூகம் சார்ந்த அதிர்வுகளையும், தாக்கங்களையும் மக்கள் மயமாக்கம் செய்யவே முடியாது. அத்தோடு இவ்வாறானவர்களினால் உயர்பீட கட்டளைக்கு தலையாட்டி பொம்மைகளாக மாத்திரமே இயங்கமுடியும்.
எதிர்பார்பற்ற அரசியல் ஊடக அதிகாரத்தை பொதுநிலையோடு சிந்திக்கும், செயற்படும் புதிய தலைமுறையின் ஆக்கத்திறன்கள் சமூக அரசியலில் பிரயோகம் செய்யப்படுவதோடு அவைசார்ந்த அமைப்புகளும் உள்ளீர்ப்பு செய்யப்படுதல் வேண்டும்.
இதனூடாகவே அரசியல் விஞ்ஞானம் ஜனநாயகமாக பொதுமைப்பாடடையச் செய்யும் உந்துவிசை அளிக்க முடியும்.
No comments:
Post a Comment