ஒரு ஊரின் ஆளுமைமிக்க ஷூறாசபை என்பது அந்த ஊரின் ஒவ்வொரு சமூக விவகாரங்களையும் நிர்வாகம் செய்யும் பொறுப்புடைமை மிக்க உயரிய தலைமைபீட தளத்தோடு மட்டுமன்றி அந்த சமூகத்தை வழிநடாத்தல் முக்கிய அமைப்புமாகும். ஆனால் பல்லின சமூக வாழ்வியல் கொண்ட சூழலில் சிறுபான்மை சமூகமாக வாழ்கின்ற முஸ்லிம் மக்களிடம் காணப்படும் தலைமைத்துவ பரவலாக்கம் பெரும்பான்மை சமூகமாக வாழ்கின்ற முஸ்லிம் ஊர்களில் காணப்படுவது மிக அறிதாகவே உள்ளது...
மேற்படி பின்னடைவுக்கு பிரதான காரணமாக அந்த சூழலில் வாழ்கின்ற மானிட சமூகம்தான் காரணம். ஏனெனில் தங்களை நிர்வகிக்கும் மிகச்சிறந்த தலைமை பீடங்களை கூட சரியாக அடையாளம் காணமுடியவில்லை என்றால் இந்த முதுகெலும்பற்ற புத்தி மந்திய மானிடர்களினால் எவ்வாறு தங்களுக்கான தேசிய அரசியல் நீரோட்டத்தில் உரிமைகள் மற்றும் சலுகைகளை பெற்றுக்கொள்ள முடியுமாக இருக்கும்????
அரசியல் ரீதியாக மட்டுமன்றி பிரதேச ரீதியாக கூட நாம் மிகப்பின்தங்கிய மானிட சூழலை கொண்டுள்ளோம் என்பது இதில் இருந்து புலனாகின்றது.
மீண்டெழுகை தொடர்பில் பேசவும், செயற்படவும் எத்தனிக்கும் நாம் முதலில் எம்மை நிர்வகிக்கும் மிகச் சரியான தலைத்துவத்தை அடையாளம் காண்பதோடு அதற்கான அடித்தளத்தை புதிய தலைமுறைகளை கொண்டு மீள் நிரப்பவேண்டிய இக்கட்டான சூழலுக்கு இன்று முகம் கொடுத்துள்ளோம் என்பதை இப்போதுதான் உணர்கின்றோம்....
எமக்கான எமக்கான எமக்கான
என்ற கோசங்கள் வெறுமனே வெத்து வார்த்தைகள் ஆவதற்கு எமது சமூகத்தின் உயர்பீட மேட்டுக்குடிகள் என்று தங்களை தாங்களே அடையாளப்படுத்திய அந்த கோமாளிகளை தேர்வு செய்த நாம் தான் காரணம்....
No comments:
Post a Comment