
அரசியல் ரீதியாக முஸ்லிம் காங்கிரஸ் கோட்டை என்று அழைக்கப்பட்ட தொகுதிதான் மூதூர். இருந்தபோதும் சமகாலத்தில் தேசிய முஸ்லிம் அரசியல் நீரோட்டத்தில் சுயலாபதிற்க்கவும், தலைமை ஆசன ஆசைக்காவும் மொத்த முஸ்லிம் சமூகமும் அரசியல் ரீதியாக பிளவுபட்ட துர்பாக்கிய சூழலை இந்த தேசிய தலைவர்களும், அவர்களின் விழுதுகளும் உண்டாகியுள்ளனர்.

இந்த பின்னணியோடு பிரித்தாளும் அரசியல் தந்துரோபாய நிகழ்ச்சி நிரலைக்கொண்டு தங்களின் அரசியல் ஆசனத்தை உறுதியோடு தக்கவைப்பதில் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் உயர்பீட உறுப்பினர்களை யாரும் மிகைத்துவிட முடியாது...
சரி விடயத்திற்கு வருவோம்...
மூதூர் தொகுதி என்று பார்த்தால் மூதூர், கிண்ணியா, தம்பலகாமம் மூன்று பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய எல்லைப்பரப்பை கொண்டது. அந்தவகையில் இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் முடிவின் படி
#தேர்தல்_தொகுதி_திருகோணமலை (2019)
திருகோணமலை மாவட்டத்தின் வாக்கு வங்கி ...
👉 மூதூர் - 103,197 (2 பிரதிநிதிகள்)

👉 சேருவில - 72,888 (1 பிரதிநிதி)
👉 தபால் மூலம் - 14,148
👉 மொத்தம் - 281,114 (4 பிரதிநிதிகள்)

👉 வாக்கு வங்கியை தக்கவைத்தல் - ஏற்கனவே கிண்ணியா பிரதேசத்தில் ஏனைய கட்சிகளான ACMC, UNP பிரதிநிதிகள் பாராளுமன்ற ஆசனத்தை கைபற்றி வருவதனால் வாக்கு வங்கியை தக்கவைக்கும் நோக்கம்.
👉 மூதூர் SLMC நிர்வாக அமைப்பின் பலவீனம் - மூதூர் பிரதேசத்தின் SLMC கட்சியின் உயர்பீட உறுப்பினர் சபை, கட்சியின் போராளிகள், ஆர்வலர்களின் மௌனம், குடை பிடிப்பு, சுயநலம், தூரநோக்கற்ற குறுங்கால இலக்குகள் மற்றும் செல்வாக்கற்ற கட்சி தொண்டர்கள் மூலமான பேரம்பேசும், கோரிக்கை முன்வைக்கும் பலமின்மை.


இதற்கிடையில் சில அரசியல் கட்சிகள் செயற்பாட்டு அரசியலில் மக்கள் மயப்படாமல், தேர்தல் காலங்களில் விழுமிய அரசியலை முன்வைத்து வாக்கு கேட்கும் நிலையும் எம்மிடம் உள்ள பலத்தை பலவீனமாக்குகின்றது.





"தேசிய பட்டியல்" என்ற பாராளுமன்ற பிரதிநித்துவத்தை குறித்து மூதூர் மக்கள் சார்பில் முஸ்லிம் அரசியல் கட்சிகள் மற்றும் உயர்பீடங்களின் நிலைப்பாடுகள் குறித்து எமது கடந்தகால அரசியல் தலைமைத்துவ வகிப்பாகம் எடுத்துக்காட்டும்.
இவ்விடத்தில் எமது ஊரை சார்ந்த தோப்பூர், சம்பூர், சேனையூர், இறால்குழி போன்ற தமிழ் பிரதேசங்களின் அரசியல் ஆர்வலர்களும், பொதுமக்களும் எமக்கான அரசியல் அதிகாரம் குறித்து மிக நீண்ட உரையாடல், விமர்சனங்கள் மற்றும் ஆலோசனை, கலந்துரையாடல்கள் மூலமாகவே சிறந்த தீர்வை பெற்றுக்கொள்ளமுடியும்...
No comments:
Post a Comment