ஸ்பானியர்கள் பிரேசிலை ஆக்கிரமித்தபோது ஆயுதங்களை காட்டி மிரட்டிய தருணம் அங்கு வாழ்ந்த பழங்குடியினர் அவர்கள் அனைவரையும் கொன்றுவிட்டார்கள். ஆனால் இதன் பின்னர் வந்த போத்துக்கீசர்களின் அணுகுமுறையே தனித்துவமாய் அமைந்திருந்தது. அவர்கள் ஆதிவாசிகளை கவர்ந்துகொள்ள பொம்மை, கண்ணாடி, விளையாட்டு பொருட்களை அன்பளிப்பு செய்தார்கள். இதனால் பூர்வீக குடிகள் போத்துக்கீசருக்கு அடிமையாகி தங்களிடம் இருந்த வளங்களான தங்கம், வெள்ளி, மருந்து மூலிகை, பெரும்பெரும் மரங்கள் மற்றும் இன்னும் பல பொக்கிஷங்களை அர்ப்பணிப்பு செய்தார்கள். அதுமட்டுமன்றி தங்கள் பூர்வீக பூமி மட்டுமன்றி உழைப்புகளை கூட அடமானம் வைத்தார்கள். தொக்கி நிற்கும் அரசியல் கலாசாரத்தை விட்டு எமக்கான தேவையை நாமே தீர்வளிக்கும் அரசியல் புதிய கலாசாரத்தை நோக்கி நடைபோடவேண்டிய தருணம் இதுதான். கடந்த காலங்கள் கற்றுத்தந்த பாடம் இதுவரையும் புரிந்தும் கட்சி அரசியலுக்கு முட்டுக்கொடுக்கும் முட்டாள்கள் எமது தோழமைகளாகவும் தொப்புள்கொடி உறவுகளாகவும் தொடர்புபடுவதான் புரியவைக்க முடியாமலுள்ளது.
தமிழ் இனத்தின் சில அரசியல் தலைவர்களான டக்ளஸ் தேவானந்தா, அழகப்பெரும, மனோ கணேசன் போன்றோர்களை உதாரணமாக எடுத்துக்கொள்வோம் என்றால்; மிகக்குறுகிய வாக்கு வங்கியைகொண்டே பேரம் பேசும் சக்திகளாக தங்களை அரசியல் சூழலில் நிலைநாட்டியதோடு மட்டுமன்றி அவர்களுக்கான தொடர் தேசிய அரசியல் அங்கீகாரத்தையும் அடைந்துள்ளார்கள். ஆனால் எமது முஸ்லிம் சமூக சூழலில் ஆதிக்கம் செலுத்தும் காட்சிகளின் அரசியல் பின்னணியை சற்று வெளியில் இருந்து பாருங்கள்.....
ஒரு அடிமட்ட தொண்டனால் தனது சூழல் பிரச்சினை, தேவை குறித்து நேரடியாக எடுத்துயம்ப முடியுமா ???
எத்தனை படித்தரங்களை தாண்ட வேண்டியுள்ளது!
எத்தனை மகஜர்களை இடைத்தரகர்களிடம் ஒப்படைக்க வேண்டியுள்ளது!
எத்தனை வாக்குறுதிகளை நம்ப வேண்டியுள்ளது!
இந்த ஒவ்வொரு கேள்விக்கும் விடைகள் தேடினால் போதும் நாம் அகப்பட்டுள்ள அடிமை சங்கிலியை உணர்ந்துகொள்ள
பிராந்திய ரீதியான அரசியலின் புதிய கட்டுமானத்தை மறுசீரமைக்க வேண்டிய பொறுப்புடைமையை சிறுபான்மை சமூகம் எதிர்கொள்ளப்போவது
எங்கிருந்து ????
எப்போது ????
எவ்வாறு ????
No comments:
Post a Comment