
அதனை தொடர்ந்து பல தேடல்களை நேற்று இரவில் தேடி பல அறியாத புதிய தகவல்களை அறியக்கிடைத்தத்து.
அதை உங்களுக்கும் பகிர்ந்துகொள்கிறேன்...
வரலாற்றில் 1712-Feb-30, 1930-Feb-30 ஆகிய இரண்டு முறைகள் மட்டுமே February 30 பதிவாகியுள்ளது. குறிப்பாக நான்கு வருடங்களுக்கு ஒருமுறை சூரிய நாட்காட்டி முறையில் (lunar calendar) லீப் வருடம் (leap year) என்று February 29 பதிவு செய்யப்படும். 2020 இவ்வருடம் Feb-29 காணப்படுகின்றது.
#February_30
முந்தைய காலண்டர் பிழையைத் தொடர்ந்து சுவீடன் அதன் 1712 காலெண்டரில் தேதியைச் சேர்த்தது; சோவியத் யூனியன் பிப்ரவரி 30 ஐ 1930 மற்றும் 1931 ஆம் ஆண்டுகளில் ஏழு நாள் வாரங்களை ஐந்து நாள் வாரங்களாகக் குறைக்கும் மற்றும் ஒவ்வொரு வேலை மாதத்திற்கும் 30 நாள் மாதங்களை அறிமுகப்படுத்தும் முயற்சியாகக் கடைப்பிடித்தது.
"Sweden added the date to its 1712 calendar following an earlier calendar error; the Soviet Union observed February 30 in 1930 and 1931 in an attempt to cut seven-day weeks into five-day weeks and to introduce 30-day months for every working month"
சுவிடன் நாட்டில் நடைமுறையில் இருந்த நாட்காட்டியில் திருத்தங்கள் கொண்டுவருவதற்காக 1712 ஆம் ஆண்டு பிப்ரவரி 30 புதிதாக இணைக்கப்பட்டது. ஆனால் அது நடைமுறைக்கு சாத்தியப்படவில்லை என்பதனால் அதனை கைவிட்டார்கள்.
இதே போன்று 1930 ஆம் ஆண்டில் சோவியத் யூனியன் வாரத்தில் 7 நாட்கள் என்ற அமைப்பை 5 நாட்களாக மாற்றி ஒவ்வொரு மாதங்களும் 30 நாட்களை கொண்ட நாட்காட்டி அமைப்பை உண்டுப்பன்னியதனால் பிப்ரவரி 30 ஐ அறிமுகம் செய்ய காரணமானது. ஒரு வருடதுள்ளேயே அதுவும் நடைமுறைக்கு சாத்தியப்படாமல் போனது.
நாட்காட்டி வழு
சாதாரண நாட்காட்டியில் 365 நாட்கள் கொண்டிருக்கும். உண்மையில் ஒரு வருடம் 365 நாட்கள் 6 மணித்தியாலங்கள் 9 நிமிடங்கள் 9.76 வினாடிகள் கொண்டது. அண்ணளவாக 0.25 நாட்களை நிரப்பும் வகையில் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை Feb-29 இணைக்கப்பட்டு நடைமுறையில் காணப்பட்டபோதும் 9 நிமிடங்கள் 9.76 வினாடிகள் நாட்காட்டி கணக்கில் கொள்ளப்படாமலே இருந்துவருகின்றது. ஒருவேளை அந்த Feb-30 இந்த குறையை நிவர்த்தி செய்ய அண்ணளவாக 3000 ஆண்டுகளுக்கு ஒருமுறை இணைக்கப்படுகின்றது என்று கொள்ளலாமா???
No comments:
Post a Comment