குறிப்பிட்ட சுடுநீர் ஊற்றுக்கள் காணப்படும் இடங்களின் இயற்கை அமைப்பியல், தாவர விலங்கு சாகியம், சூழல் தட்பவெப்ப காலநிலை மற்றும் அதனை சூழவுள்ள கிராமங்களின் குடித்தொகை வளர்சிகளை சற்று ஆய்ந்து நோக்குகையில் அங்கே முஸ்லிம்களின் பூர்வீக பின்னணி இருந்துள்ளதை அறியக்கிடைத்துள்ளது.
ஆதம் பாவா மலை/ சிவனொளி பாதமலை பின்னணியில் இலங்கையில் தான் முதல் மனிதன் இரக்கப்பட்டான் என்று மதங்கள் சார்ந்த நம்பிக்கை இருந்தபோதும் தொல்பொருளியல் சார்ந்த ஆதாரங்களும் அவற்றுக்கு சார்பானதாகவே காணப்படுகின்றது.



இந்த பின்னணியில்
"அவர்களுக்கு உண்ண அங்கிருந்து ஏதாவது கனி கொடுக்கப்படும்போதெல்லாம் “இதுவே முன்னரும் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று கூறுவார்கள்; ஆனால் தோற்றத்தில் இது போன்றதுதான் அவர்களுக்கு உலகத்தில் கொடுக்கப்பட்டிருந்தன" (அல்குர்ஆன் 2.25)

“இதிலிருந்து) நீங்கள் இறங்குங்கள் - உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவராயிருப்பீர்கள்; உங்களுக்கு பூமியில் தங்குமிடம் இருக்கிறது; அதில் ஒரு (குறிப்பிட்ட) காலம் வரை நீங்கள் சுகம் அனுபவித்தலும் உண்டு” (அல்குர்ஆன் 7.24)
மேற்படி இரு வசனங்களும் மேலும் வலுவூட்டுவதாகவே அமைகின்றது...
அத்தோடு அறிவியல் ரீதியாக வெந்நீர் ஊற்றுக்களை நோக்குபோது அவை நிலக்கீழ் வெப்பம் காரணமாக சூடாகி வெளிவரும் நீர் ஊற்றுகளாகும்.
குறிப்பாக இவ்வாறு காணப்படும் இடங்களில் பெரும் பெரும் சியாரங்களின் (கல்லறை) சுவடுகள் இன்றளவும் காணப்படுகின்றது. சில அழிக்கப்பட்டுள்ளன, இன்னும் சில பெரும்பான்மை சமூகத்தினால் மறைக்கப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்றது. உதாரணமாக திருகோணமலை கண்ணியா வெந்நீர் ஊற்றை குறிப்பிடலாம்...
தொடர்ந்தும் எமது பூர்விகத்தை தேடுவோம்...
No comments:
Post a Comment