பிரிவினைவாதம் குறிப்பாக எமது முன்னோர்கள் மற்றும் அரசியல் முன்னோடிகளின் அரசியல் ரீதியான நிலைதிருப்பிற்கு மிகப்பிரதான மறைமுக ஆயுதமாக கையாளப்பட்டுள்ளது. மிகச்சிறு தேவைகளை நிவர்த்தி அளிப்பதோடு மிகப்பெரும் தேவை, குறைப்பாடுகளை தொடர்ந்தும் அரசியல் மயமாக்கும் அறிவுபூர்வமான அரசியல் நகர்விற்கு இது உந்துசக்தியாக உறுதுனையளித்துள்ளது.
எனவே புதிய சமூக மாற்றத்தையும் அரசியல் ரீதியான ஆர்வத்தையும் இளம் தலைமுறையினரிடம் அதிகம் நுகரக்கூடியதாக உள்ள இத்தருணத்தில் எமது முன்னோர்கள் விட்ட அதே தவறை இன்றுள்ள சமூகத் தொழிற்பாட்டுநிலை பிரஜைகள் கையாள்வதில் மிக நுணுக்கமான நடைமுறையை முன்மொழிவு செய்யவேண்டும். இவ்வாறான ஆரோக்கியமான நடைமுறைகள் எமது தூரநோக்கு இலக்குகளை வலுப்படுத்தவும் அதற்கான மனிதவளத்தை கட்டியெழுப்புவதிலும் பங்காற்றும்.
துறைசார் நிபுணர்கள், சமூகமட்ட ஓய்வுநிலை அனுபவவாதிகள், இளம் கல்வியலாளர்கள், ஆசிரியர்கள், மதகுருக்கள், உள்ளக சமூக அமைப்புகள் மற்றும் தொழிற்பாட்டு நிலை சமூக தலைவர்கள் கொண்ட ஒரு கூட்டுக்குழு இவை யாவற்றையும் நிர்வகிக்கும் தார்மீக பொறுப்பை உணர்வுபூர்வமாக ஏற்று செயலாற்ற முன்வரவேண்டும்...
No comments:
Post a Comment