இந்த தூண்டுதலுக்கு ஒரு மிகச்சிறு "எண்ணக்கரு" வெளிப்பாடு அதனை முதலில் புரிந்துகொண்ட செயலாற்றும் ஒரு மிகக் குறைவான மனித வலுக்களை பிரயோகம் செய்யும் அடித்தள குழுவினரின் விடா முயற்சி பிரதான மூலதனமாக தொழிற்பட்டு இருக்கும்.
இந்த குழுவினர் சமூகக்கடப்பில் நிலைபேறான ஒரு தூரநோக்கு இலக்கை தம் பயணமாக கொண்டு நகர்ந்ததன் விளைவு அந்த சமூகம் புத்துயிர்ப்புக்கு வழிகோலியது என்பதை மறுமலர்ச்சியை உணரும் போதுதான் எதார்த்தமான உண்மை புலப்படும். அதுவரை துரோகம், பழிதீர்த்தல் மற்றும் காட்டிக்கொடுப்புகள் சர்வசாதரணமாக தொடர் தாக்குதலுக்கு முகம்கொடுக்க நேரிட்டிருக்கும் குறித்த அடித்தள வகுப்பாருக்கு.
தன் சமூகம் சார்ந்து தன் உழைப்பை முதலீடாக அர்ப்பணம் செய்யும் எந்தவொரு சிந்தனையாளனுக்கும் இவ்வாறான தாக்குதல்கள் அவனுக்கு மேலும் முன்னோக்கி செல்ல தூண்டுகோலாக அமையுமே தவிர அவை ஒருபோதும் பயணத்தில் பின்தங்கும் நிலைப்பாட்டை நோக்கி நகர்த்தாது என்பதே உலகளாவிய பொதுவிதி...
No comments:
Post a Comment