இந்த இருவகை வளங்களையும் முகாமைத்துவம் செய்வதே சூழலியல்/ சமூக வள முகாமைத்துவம் (Environmental / Social Resources Management) எனப்படும். பேண்தகு/ நீடுத்து நிலைபெறும் அபிவிருத்திகள் (Sustainable Development) தொடர்பிலான சமூகக் கண்ணோட்டம் பொதுவாக பௌதீக வளமுகாமைத்துவம் விடயத்திலேயே மதிப்பீடு செய்யப்படுகின்றது.
உண்மையில் பௌதீக வளங்களை காட்டிலும் உயிரியல் வளங்களே அதிக செயல்திறன் கொண்டதோடு பேண்தகு அபிவிருத்தியில் திட்டமீட்டல், ஒழுங்குபடுத்தல் விடயத்தில் தாக்கம் செலுத்துகின்றது.
உயிரியல் வளங்களை முகாமைத்துவம் செய்யவதில் விடுகின்ற தவறுகளே எம்மால் பௌதீக ரீதியான வளங்களை முறையாக நுகர்த்துக்கொள்ள முடியாமலும் அதனை சார்ந்த ஏனைய பயன்களை அனுபவித்துக்கொள்ள முடியாமலும் வளத்துஸ்பிரயோகம் செய்ய முட்படுகின்றோம்.
உயிரியல் வளங்கள் முகாமைத்துவம் செய்வது சற்று நடைமுறை சிக்கலானது. ஏனெனில் அங்கே கருத்தியல் ரீதியான பல்வகை சிந்தாந்த கோட்பாடுகளும், திட்ட ஆலோசனைகளும், பன்மைத்துவ திறன்களும் ஒரு புள்ளியில் குவியும் நிலையில் ஒருமைப்பாடு குறித்தன தீர்க்கமான முடிவுகள் எட்டுவது கடினமாகும்.
இருந்தபோதும் எமது விட்டுக்கொடுப்புகள் புரிந்துணர்வு மற்றும் முன்னுரிமைப்படுத்தல் அடிப்படையிலான தீர்மானங்கள் எம் சமூகத்தில் காணப்படும் பல ஆளணி ரீதியான துறைசார் வெற்றிடங்களை நிவர்த்திக்க உதவும்.
நடைமுறை ரீதியில் உயிரியல் வளங்களை மூலதனமாக முகாமைத்துவம் செய்வதில் வெற்றிகண்டுள்ள வளர்ச்சியடைந்த மானிட சமூக கட்டமைப்புகள் முன்னுதாரணமாகக்கொண்டு மாற்றீடு வளங்களை (Alternative Resources) அறிமுகம் செய்வதின் அத்தியவசியப்பாட்டை எப்போது எம் சமூகம் உணர்ந்து அதனை செயற்படுத்த முனைகின்றதோ அப்போதே எமது சமூகத்தின் மறுமலர்ச்சியை எதிர்பார்க்கலாம். அதுவரை நாம் அடிமை வாழ்வியல் கோலத்திலேயே உழலவேண்டிய நிர்பந்த சிறைவாசம் தகர்த்தெறியப்படமாட்டாது.
No comments:
Post a Comment