
எந்தவொரு சிந்தனையும், செயற்பாடும் அரங்கேற்றப்பட அவற்றோடு தொடர்புடைய மானிட வலுக்களின் பிரயோகம் மிக முக்கிய பங்குடமையை பெறுகின்றது.
இந்தவொரு பின்னணியிலேயே ஒரு சமூக ஆர்வலன் தன் சமூகத்திற்கு இழைக்கப்படும் துரோகங்கள், புறக்கணிப்புகள் மற்றும் சலுகை, உரிமைகள் மீதான தொடர் தாக்குதலை எதிர்க்கும் மீள் கோஷத்தை அதிகாரத்தோடு ஆணையிடும் நோக்குடன் தன் பதவி, பட்டம், மனித, பொருளாதார வளங்கள் குறிப்பாக அரசியல் அதிகாரத்தை நோக்கி நகர்கின்றான்...
இந்த நகர்வுகள் சில பொழுதுகள் ஏற்றுக்கொள்ளப்படுவதோடு பெரும்பாலான சமயம் புறக்கணிப்புகளில் தான் முடிகின்றதை அவதானிக்க கூடியதாகவுள்ளது...
மனிதன் ஒரு சமூகப்பிராணி என்ற வகுப்பார் என்பதனால் அவனால் எப்போதும் அரசியல் ரீதியான சாடல்களில் அதிகம் ஈர்க்கப்படுவான் என்பது இயல்பான உலகளாவிய பொதுவிதி.
No comments:
Post a Comment