இதற்கு தற்கால அரசியல்வாதிகளின் கடந்தகால செயற்பாடுகளும் ஒரு பிரதான காரணமாக அமைந்துள்ளதுதான்.
குறித்த சமூக பொதுப்புத்தி கண்ணோட்டத்தின் விளைவாகவே பல ஆளுமை மானிட வளங்கள் தங்களை சமூக மட்டத்தில் அடையாளப்படுத்திக்கொள்ள முடியாமல் போகின்றதோடு இலைமறைகாயாக சமூகத்தில் மிகச்சிறு வகிபாகத்தை பெற்றுக்கொள்ளவும் முனைந்துள்ளனர்.
வெறுமனே சில்லறை சமூக செயற்பாடுகள் (சேவை அல்ல) அரசியல் ஆளுமைக்கு தகுதியான எடுகோளாக என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை.
எனது அவதானத்தின் படி "அரசியல் என்பது ஒரு ஆற்றல்". இது கல்வி, பொருளாதாரம். ஏட்டுப்படிப்பு, பட்டம், பதவிகள் மற்றும் ஆளணி வளம் கொண்டு தீர்மானிக்கப்படுவதில்லை. அத்தோடு சமூகத்தின் #இடைத்தட்டு_மக்கள் மத்தியில் இருந்துதான் ஒரு மெய்யான அரசியல் ஆளுமை பிறக்கிறான். ஏனெனில் அவனால் மட்டுமே அடித்தட்டு மக்களின் அடிப்படை பிரச்சினைகளையும், மேட்டுக்குடி மக்களின் மேலாதிக்க போக்கையும் உணர்வுபூர்வமாக உணர்திருக்கமுடியும் . இதனால்தான் மெய்யான அரசியல் ஆளுமைகளினால் மக்கள் மன்ற அணைத்து வகுப்பாறையும் திருப்திப்படுத்த முடிகின்றது....
மெய்யான அரசியல் ஆளுமைகளிடம் கீழ்காணும் சமூக பண்புகளை எம்மால் அவதானிக்க முடியும்.
குறிப்பாக தூரநோக்குடைய சிந்தனையும் செயற்பாடும், சமத்துவமும் பக்கச்சார்பின்மையும், எழுத்தறிவு, மொழி ஆளுமை, பன்மைத்துவ சகிப்புத்தன்மை, வலுவான ஆளிடை தொடர்புடமை, தொடர்பாடல், வாய்ப்பு அளித்தலும் மதிப்பளித்தலும், மற்றும் தன்னை பிற்படுத்தி தன்னை சார்தவரை முற்படுத்தல், குறிப்பாக தன்னை சார்ந்தவர்களின் தேவை, மனோநிலை, ஆற்றல், திறன், மற்றும் வாழ்வியல் கோலங்களை இனங்கண்டு இருப்பார்.
மீண்டும் மீண்டும் சொல்வது ஒன்றுதான்...
அரசியல் ஆளுமைகளை நாம் சாதரணமாக புறத்தோற்றத்தை கொண்டு கணிப்பீடு செய்துவிட முடியாது... அதற்காக சமூகம் ஒருவரை அடையாளம் கண்டு பயிற்றுவிக்கவேண்டும். அவரை வலுப்படுத்தவேண்டும், அவரின் கரங்களையும், சிந்தனை மற்றும் உளத்திரனையும் வலுவூட்டவேண்டும்... இது ஒரு சாதரணமான இலக்கு அல்ல... இது ஒரு மிக நீண்ட குறிக்கோள் கொண்ட சமூகக்கடமையோடு தியாகங்கள் அப்பால் நாம் அடைந்துகொள்ளவேண்டிய ஒரு மையில் கல்...
இவ்வாறான தகைமைகள் பொதிந்த ஒருவரை உருவாக்கத் தவறியதன் காரணமாகவோ அல்லது ஆதரவளிக்க தவறியதன் காரணமாகவே எம்மால் அரசியல் ரீதியான வெற்றிடத்தை இன்னும் அடைந்துகொள்ள முடியாமல் இருக்கின்றது....
--------------------------------------
இப்போது அரசியலில் எனது வகிபாகம் பற்றிய தலைப்புக்கு வருவோம்...
இதுவரை அற்ப சில சமூக செயற்பாடுகள் தொடர்வதற்கு உடல், பொருள், நேரம், சூழல் குறிப்பாக என்னைச் சார்ந்த மனித வளங்கள் சாதகமாக அமைந்துள்ளது. இது தொடரும் என்று ஊர்ஜிதமாக கூறமுடியாது. எனக்கு ஓய்வு நேரம் கிடைக்கும் போது #பொழுதுபோக்கிற்காக இந்த செயற்பாடுகள் செய்துவருகின்றேன். அதற்கிடையில் தாய், தந்தை, நண்பர்கள், காதலி என்று எத்தனை நபர்களை சமாளிக்க வேண்டும் என்று எனக்குத்தான் தெரியும்... இருந்தாலும் சில செயற்பாடுகளினால் எனக்கு ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கின்றது.
அதற்காக என்னை அரசியல் பயணத்திற்கு பொருத்தமானவன் என்று நீங்கள் எடுகோள் எடுத்துக்கொண்டால் அது பாரிய தவறுதான் என்று #நானே கூறுவேன்... "அதற்கான தகமை இன்னும் இல்லை என்பதே எனது பதிலாக இருக்கும்..."
ஆனாலும் எனது பயணத்தின்
Mission "தன் தேவையை தன்னிடமுள்ள ஆற்றல், திறன் ரீதியாக நிவர்த்திக்கும் வளங்களை இனங்காண்தலும், நிர்வகித்தலும்"
Vision "அறிவாற்றல் ரீதியாக எமக்கான அரசியல், ஆன்மிகம், பொருளாதாரத்தில் தன்னிறைவு காண்பதே"
எனது தனிப்பட்ட செயட்பாடுகளுக்கு அரசியல் ரீதியான பயணம் தடையாக அமையும் என்பதை நான் உணர்கிறேன். எனவே என்னை சுயமாக தன்னிச்சையாக இயங்க இடமளியுங்கள்.
வெற்றிடங்களை நிரப்புவது எமது பணியல்ல...
மாறாக
வெற்றிடங்களே இல்லாமல் நிரப்புவதே எமது பணி...
"ஒவ்வொரு துறையிலும் துறை சார் ஆளுமைகள் மூலம்"
நன்றி...
தொடர்ந்தும் பேசுவோம், செயற்படுவோம்....
No comments:
Post a Comment