நடுநிலை பின்வருமாறு வகைப்படுத்தலாம்
1. தனியன் அல்லது குழுவின் சுந்திர சிந்தனை, செயற்பாடு மற்றும் உரிமைசார் நடுநிலை.
2. தனியம் அல்லது குழுவின் சமூகவியல் ரீதியான துறைசார் அடையாளம் மற்றும் சமூகவியல் அந்தஸ்து தொடர்பிலானவை.
3. ஒரு சமூகத்தின் சலுகை, உரிமை, முன்பாடு மற்றும் பிரச்சினைகளின் போதான நிலைமைகள்.
இந்த அடிப்படையைக்கொண்டு தனியன் அல்லது குழு தன் சமூக விவகாரங்களில் தான் சார்ந்து நிலைப்படுத்தும் அதிகாரம் பொதுப்புத்தி கண்ணோட்டத்தில் குறித்த சாராரோடு போட்டியிடும் அல்லது எதிர்த்துநிற்கும் தரப்பார் நடுநிலைமை குறித்து பேசும்போது நீதிக்கு புறம்பான விடையதானம், வீண் குற்றச்சாட்டுகள், துஸ்பிரயோகங்கள், வரம்பு மீறுதல் போன்றவைகள் குறித்துதான் விமர்சனம் அளிக்க முடியும். இதுவே சிந்தனா ரீதியான ஆரோக்கிய அணுகுமுறை என்று German sociologist, philosopher ஆனா Max Weber பதிவு செய்கிறார்.
ஆனாலும் நாம் வாழ்கின்ற சூழல் கட்டமைப்பில் தம்மோடு போட்டிபோடும் போட்டியாளர்கள் மற்றும் தம்மை சார்ந்து ஆரோக்கிய விமர்சனம் செய்யும் நபர்கள் மற்றும் தமக்கு எதிரான கருத்துப் பதிவுகளை பதிவு செய்பவர்கள் மற்றும் அவை சார்ந்த ஏனைய நபர்கள் தொடக்கம் சிந்தனை செயற்பாடுகள் வரை எதிரியைப்போன்று நோக்கும் மனோவியல் பண்பு மாற்றப்படும் போதுதான் எம்மால் விமர்சனங்களை நுகரும் பொதுமைப்பாட்டு சமூக ஆற்றல் விருத்தியடையும். இந்தக் குறிப்பேடு அடிப்படையில் தனியன் அல்லது குழுவினர் தான் ஆதரிக்கும் எதிர்க்கும் நிலை பற்றி நாம் பொதுவெளி சிந்தனைக்கு அப்பால் இருந்து தீர்மானம் மற்றும் விமர்சனம் செய்வதே உசிதம். இதை புரிந்துகொண்டால் சமூகமட்ட சில சில்லறை புரிந்துணர்வுப் பிறழ்வுகளும் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும். ஜனநாயகம் என்ற விலாசமான அறிவுபூர்வ பொதுவுடைமைப் பார்வை நடுநிலைமை என்ற பதத்திற்கு தாராளமான விரிவுரையை அளிக்கும் என்பதே நாம் உணரவேண்டிய தளம்.
No comments:
Post a Comment