இதற்கு முற்றிலும் மாற்றமாக கல்வி, பொருளாதாரம், சமூக அந்தஸ்து போன்றவற்றில் பின்தங்கிய ஒரு மனித உடலினால் வெளிப்படும் மனித வலு அந்த சமூகத்தில் பாரிய அளவிலான சீர்திருத்தத்தை உண்டுபண்ணும். இருந்தபோதும் ஒரு அறிவார்ந்த வர்க்கத்தின் சார்பில் வெளிப்பாடும் சிறு சிந்தனை விதையைவிட மனித உழைப்புகள் ஒன்றும் ஒப்பீட்டளவில் மறுமலர்ச்சிக்கு பாரிய பங்கு அளிகமுடியாதுதான்.
எப்போது ஒரு சூழலில் காணப்படும் தனி மனித வளங்களை நிலைபேறாக குறிப்பாக பயனுறுதி வாய்ந்த விதத்தில் முகாமைத்துவம் செய்வதோடு அவற்றை வினைத்திறனுடன் வளப்பங்கீடு செய்கின்றோமோ அப்போதே அந்த தனி மனிதனின் ஆற்றலும் அறிவும் பெருக்கெடுத்தோடும் அற்றை போன்றதாக உருமாறும். இதனால் அந்த ஆற்றில் காணப்படும் பயனற்ற சருகுகளும் குப்பைகளும் கரையொதுக்கப்பட்டு சமூகத்திற்கு பயன்மிக்க ஒரு வளமாகம பிரயோகமாகும்...
No comments:
Post a Comment