
தளம்பல் நிலை புத்தாக்க சிந்தனையினால் சமூகத்தில் பாரியளவிலான அதிர்வலைவுகளை உண்டாக்கிட முடியாது. குறிப்பாக இளைஞர் யுவதிகளின் தொலைநோக்குப் பார்வையும் தான் வாழ்கின்ற சூழல் கட்டமைப்பில் நிலைத்தன்மையை உத்தரவாதம் செய்யும் வகையிலான முன்னெடுப்புகளே இந்த புத்தாக்க சிந்தனைக்கு வலுவூட்டமுடியும். இந்த பின்னணியின் அடிப்படையில் நாம் வாழ்கின்ற கட்டமைப்பில் இடைத்தொடர்புப் பின்னல் எமது சிந்தனை விரிவாக்கத்தில் மிக அதிகமான பங்கை உள்ளீர்த்து விடுகின்றது.
அந்தவகையில் நாம் மென்மொழியும் எண்ணக்கரு எமது சமூகத்தில் பிரயோகம் செய்யும் சாத்தியக்கூறுகள் மற்றும் சந்தர்பங்கள் இழிவலவாக காணப்பட்ட போதும் அதற்கான முயற்சிகளையும் முனைப்புகளையும் எம்மால் மேற்கொள்ளப்பட்டதா என்பதுவே எமக்கான கேள்விக்கணை என்பதை நாம் ஏந்திக்கொள்ளவேண்டும். மாறாக எதிர்மறை வாதம், விமர்சனம் மற்றும் மறுப்புகள் மீதான எதிர்த்தாக்குதலை முன்னிலைப்படுத்தி எமது எண்ணக்கருவை எமக்குள்ளே புதைத்துவிடுவது என்பது ஒரு சிந்தனைவாதியின் அழகல்ல...
சூழல் மாற்றங்கள் சடுதியாக இடம்பெறும் ஒரு விடயதானமன்று. மாறாக தொடர்ச்சியாக நிகழ்த்தப்படும் அதிர்வுகள் மற்றும் மோதல்கள் காரணமாக உண்டாகும் மொத்த அகப்புற வெளிப்பாடுகளாகும். இதனை எவ்வாறு அந்த சமூகம் ஏற்றுக்கொள்கின்றது என்பதைப்பொறுத்தே அந்த சமூகத்தின் மறுமலர்ச்சி தொடக்கம் பெறுகின்றது.
எமது இளையோர்களின் புத்தாக்க சிந்தனை விருத்தியையும் வெளிப்பாடுகளையும் இன்றுள்ள மூத்த தலைமுறையின் அதிகார வர்க்கத்தினர் ஆதரிப்பதனூடாகவும் அங்கீகாரம் அளிப்பதனூடகவுமே அதன் சமூக அடைவை கிரகித்துக்கொள்ள முடியும் என்பதோடு அதற்கான வளங்களையும், வழி வகைகளையும் இன்றுள்ள தலைமுறைகள் உணர்ந்து செயலாற்றுவதில் உண்மையான மாற்றத்தையும் காணமுடியும்...
No comments:
Post a Comment