இந்த பண்புத்துவ வெளிப்பாடு சில பொழுதுகள் தாங்கள் வகிக்கும் குழவின் அல்லது சாராரின் மென் பண்புகளின் தாக்கமாக கூட அமையும். சம கால சூழலில் அறிவு ரீதியான பன்மைத்துவமும் பரிணாமமும் பெற்றுள்ள நாம் பண்பாட்டியல் விழுமிய ரீதியாக இன்னும் பக்குவம் பெறவில்லை என்பது எமது அன்றாட மானிட இடைத்தொடர்புகளையும் சமூகவியல் வாழ்வு முறையிலும் வெளிக்காண்பிக்க ப்படுகின்றது.
ஒவ்வொரு தனி மனிதனும் தலைமைத்துவ அதிகாரப் பரவலாக்கத்தை ஏதோவொரு வகையில் நிர்வாகம் செய்கிறான் தனக்கு கீழுள்ள மனிதர்களிடத்தில். இந்த இடத்தில தலைமைத்துவ பண்பியல், கட்டளை முறை, முரண்பாட்டு அணுகுமுறை மற்றும் சமுத்துவ முகாமைத்துவம் போன்ற சிக்கலான நடைமுறை ஒழுக்கவியல் அவன் கற்றுக்கொண்ட பண்பியல் ஆற்றலில் வெளிப்படும்.
நமது நடத்திக் கோலங்களின் பிறழ்வுகள் எமது தனித்துவ அடையாளத்தில் பாரிய செல்வாக்கை செலுத்தும்....
மென் பண்பியல் ரீதியாக நாம் நடைமுறை கற்றல் மூலங்களை சமூக மட்டத்தில் பரவலாக்கம் செய்யவேண்டிய இக்கட்டான காலகட்டக் களத்தில் நின்று கொண்டிருக்கிறோம் !!!
No comments:
Post a Comment