தாவர விலங்கு உடல்கள் கலங்களை அடிப்படை கட்டமைப்பு, தொழிற்பாட்டு ஆக்க அலகாகக் கொண்டிருக்கும். கலங்களின் உள்ளடக்கத்தில் சுமார் 70% நீர் காணப்படும். வெப்பம் காரணமாக கலத்தின் உள்ளடக்கத்தில் காணப்படும் நீர் நீராவியாக மாறி வளிமண்டலம் அடையும். இவ்வாறு பல மில்லியன் கணக்கான தாவர விலங்கு உடலில் இருந்து நீர் வான்மண்டலத்தை அடையும். அவை மீண்டும் குளிர்வடைந்து தரையை அடையும். இது மழை பொழிவாகவே பெரும்பாலும் அமையும்.
இதுவே பிரதான காரணமும் இயற்கை அமைப்பியல் சமநிலை ஒழுங்குமுறையுமாகும்.
மனிதர்கள் தங்களில் சுயநலத்திற்கும், உள்நாட்டு விவசாய உற்பத்தியை மேம்படுத்தவுமும் மேற்கொள்ளும் முக்கிய படையெடுப்பே உள்நாட்டு காடுகளை உற்பத்தி நிலமாக மாற்றம் செய்தலாகும்.
ஓர் நாடு தன்னிடமுள்ள வளங்களை எவ்வாறு முகாமைத்துக்கம் செய்கின்றதோ அவ்வாறே அந்நாட்டின் உற்பத்தி வீதம் மேலோங்கும். இந்த அடைவை எட்ட அந்நாடு சில தியாகங்களை செய்வது அந்நாட்டிற்கு ஒரு பொருட்டே அல்ல.. ஆனால் அந்த இழப்பீடுகளை ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கும் அச்சுறுத்தலாக அமைவதற்கு யார்தான் என்ன செய்ய இயலும்???
நீடித்து நிலைபெறும் வளப்பயன்பாடுகள் பற்றிய முறையற்ற திட்டங்களினால் இவ்வுலகில் உயிர் கொலைகளுக்கு பஞ்சமே இருக்காது...
No comments:
Post a Comment