மானிட கண்டுபிடுப்பு, படைப்பு மற்றும் வெளியீடுகளின் நேர்த்தியில் உள்ள குறைப்பாடுகளை காணும்போதும் பிரபஞ்ச அமைப்பின் நேர்த்தியான பௌதீக பிணைப்புகள் என்னை ஆச்சரியமூட்டுகின்றது. இறைவனை அறிய அவனின் படைப்புகள் பற்றியும் மானிட இயலாமை பற்றியும் உணர்வதே மிகச்சிறந்த வழிமுறை. ஆனால் இங்கே மிகச்சிக்கலான ஒரு உளவியல் அறிவுசார் சமநிலை தன்மை வேண்டும். அதுதான்...
பிரபஞ்ச படைப்புகள் நாத்திக, அநாத்திக வெளிப்பாடுகளை சார்ந்து நிற்பவையே. இதுவொரு சோதனை என்றுதான் நான் காண்கிறேன். அதாவது கடவுள் இருப்பு, மறுப்பு என்ற சித்தாந்தத்தை உரசிப்பார்க்கும் குறித்த தளம் அது.
உதாரணமாக கூறப்போனால் ...
பிரபஞ்ச கூறுகளில் காணப்படும் "விதி விளக்குகள்"
இவை ஒரு தனித்த படைப்பில் தன்னை வேறுபடுத்தி காட்டும் ஒரு வர்க்கமாகும். இதுவே இறை மறுப்பு, ஆதரிப்புக்கு ஆதாரமாக அமையும் துணைக்கூறுகள்.
ஒரு நாத்திகன் இதனை "இயற்கை தோற்றத்தில் காணப்படும் விதிமுறை முரண்பாட்டு பிழைகள் இவை" என்று புரிந்துகொள்ளும் அதேவேளையில் ஆத்திகன் அதனை "இவ்வாறும் இறைவனால் படைப்பை ஆக்க முடியும்" என்றும் தனக்குத்தானே சாட்சியமிளிக்கிறான்...
“அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா?"(அல்-குர்ஆன் 39:9)
No comments:
Post a Comment