இவ்வுலகில் நிகழும் ஒவ்வொரு சடுதியான மற்றம் ஆகட்டும் அல்லது மந்தமான மாற்றமாகட்டும் அவைகளின் பின்னே எப்போதும் மனித பிறவியின் சுயநலம் தொக்கிநிற்பது வழமை. இந்த நடைமுறையின் அடிப்படையில் தான் இவ்வுலக வாழ்கையின் தொடர்ச்சி நீடித்து நிலைபெறுகின்றது.
உதாரணமாக ஒரு மெழுகுவர்த்தியை நீங்கள் உங்கள் அறைக்கு ஒளியேற்ற வைகிறீர்கள். அது குறித்த நேரத்திற்கு ஒளி அளித்துவிட்டு அணைந்துபோகும். ஆனால் நீங்கள் அது ஒளி அளித்த சிறு நிமிடங்கள் வரை தனிமையினையும் இருளின் அச்சத்தினையும் உணர்த்திருக்க மாட்டீர்கள். ஆனால் இருள் உங்களை சூழ்ந்தபோது உங்களுக்கு அந்த சிறு மெழுகுவர்த்தி சுடரின் தேவையினை குறித்து யோசிப்பீர்கள்...
இவ்வாறுதான் எமது அன்றாட நடைமுறை வாழ்வியலில் மிகச்சிறிய பொழுதுகள் உங்களுடன் பயணித்த பலரை நீங்கள் கடந்துவந்து இருப்பீர்கள். ஆனால் அவர்களுடன் இருந்த அந்த தருணங்கள் உங்களுக்கு எந்தவித பயனும் அற்றதாக உணர்த்து இருக்கலாம்... ஆனால் நீங்கள் ஒருவேளை அவரின் வாழ்கையில் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தை பெற்று இருக்க கூடும்.. அது நேரோட்டமோ அல்லது மறையோட்டமோ என்பது உங்களுக்கு உணரும் சந்தர்பம் கிடைத்திருக்காது...
எனவே
ஒவ்வொரு பொழுதுகளும் நீங்கள் ஆழமாக எண்ணிக்கொள்ளவேண்டியது இதுவே...
எனது வாழ்க்கை முறை நான் மட்டும் வாழ்வது அன்று. மாறாக அது இடையறாத சங்கிலியின் முன்னும் பின்னும் உள்ள பாகத்தின் கூறு என்பதே...
No comments:
Post a Comment