உணவுப்பொதி (Food Packaging)
உணவு பாதுகாப்பு வழிமுறைகளில் பல நவீன முறைகள் அண்மைகாலமாக பயன்பாட்டில் இருந்துவருகின்றது. குறிப்பாக உணவுப்பொதி முறைகள் இதற்கு பிரதான பங்கை அளிக்குகின்றது. உணவு வகை, உணவின் கால எல்லை (food shelf life), உற்பத்தியின் தரம் (Quality), விலை போன்றன இந்த பொதி முறையில் தாக்கம் செலுத்தும்.
சில உணவு வகைகளுக்கு விசேடமாக குறிப்பிட்ட உணவுப்பொதியிடல் முறை பொருத்தமானதாகவும், சௌகரியமானதாகவும் காணப்படும். அந்தவகையில் ஜேம் போன்ற குறைதிண்ம (Semi-solid) உணவு வகைகள் பெரும்பாலும் பிளாஸ்டிக், கண்ணாடி பொதியிடல் முறை பரிந்துரை செய்யப்படுகின்றது.

விசேடமாக ஜேம் போன்ற குறிப்பிட்ட மீள் நுகரும் உணவு வகைகளுக்கு #உருளைவடிவிலான கண்ணாடி போத்தல்கள் அதிகம் சந்தையில் பயன்படுத்த பிரதானமாக கீழ்வருவன காரணமாகின்றது.
👉 உதாரணமாக கனவுரு வடிவில் ஜேம் போத்தல் காணப்படின் ஜேம் போன்ற மீண்டும் மீண்டும் திறந்து நுகரும் உணவு பொருட்கள் என்பதனால் விளிம்புகள் உள்ள உட்பகுதியில் உணவு தேக்கம் நடைபெறும். இதனால் இலகுவாக நுண்ணங்கி தோற்றி உணவு பழுதடையும் வாய்ப்பு உருவாகும். இதையே உருளைவடிவிலாக போத்தல் காணப்பட்டால் இலகுவாக நாம் கரண்டியின் மூலமாக ஜேம் போன்ற உணவை வெளியில் தேவைக்கு எடுக்க முடியும். (உணவுப் பாதுகாப்பு - Food Safety)
👉 கண்ணாடி உற்பத்திகள் விளிம்புகள் கொண்டு ஆக்கப்படுவது உற்பத்தி செலவை கூட்டும். அத்தோடு உருளை வடிவலான அமைப்பில் அதிகளவு அமுக்கம், உராய்வு, மற்றும் அதிர்வு போன்ற சூழல் பௌதீக காரணிகளை தாங்கும் வல்லமை பெரும்.

உருளைவடிவ, கண்ணாடி போத்தல்கள் பயன்படுத்துவதனால் சில பாதகங்களும் எதிர்நோக்கவேன்டியே உள்ளது...
👉 இலகுவாக உடைந்துவிடும்.
👉 கூட்டுப்பொதி செய்தலில் போது வெற்றிடம் நிலவுகின்றது.
👉 அதிக நிறை கொண்டது.
👉 கண்ணாடி பொதியிடல்கள் ஒப்பீட்டளவில் விலை உயர்வு.
திரவ வடிவிலான உணவு பொருட்கள் விளிம்புகள் கொண்டு அமைக்கப்பட்டால் பொருத்தமானதாக இருந்தபோதும் குறைதிண்ம உணவு வகைகளின் பொதியிடல் உட்பகுதி உருளைவடிவிலேயே அமையப்பெருவது உணவு பாதுகாப்பு முறை என்ற ஒரேயொரு அடிப்பை நோக்கத்திற்கே ஆகும்.
No comments:
Post a Comment