மானிட சமூகத்தின் ஒவ்வொரு கூறுகளுக்கும் தனக்கே தனித்துவமான இரு பண்பியல் முகங்கள் காணப்படும். அவை இரண்டும் தான் வாழ்கின்ற சமூக சூழல் கட்டமைப்பை பொறுத்து வெளிக்காட்டப்படுகின்றது. இந்த முகங்கள் வெறுமனே எப்போதும் ஒரே மாதிரியாக வெளிக்காட்டப்பட்டுக் கொண்டிருக்க சந்தர்ப்ப சூழலை சமுதாயம் அளிக்கமாட்டாது.
குடும்பம், நண்பர்கள், பகைவர்கள் மற்றும் சமுதாய மட்டம் என்று பல்வகைமை பெறுகின்ற இந்த குணாதிசயங்கள் அவன் தனித்து தனிமையில் இருக்கும்போது மாறுபட்ட முகத்தின் பிரதிபலிப்பாக வெளிக்காட்டப்படுகின்றது. தான் செய்கின்ற பாவம், புண்ணியம் மற்றும் உள்ளார்ந்த பண்புகளான பொறாமை, அன்பு, பரிதம், வஞ்சகம் போன்ற நடத்தைகளும் அதை சரிபிழை காணும் தன மனசாட்சியின் கோலங்களும் இவ்வுலகில் காணும் எந்த உயிரினத்திற்கும் இல்லாத தனித்துவ அடையாளத்தை அது குறிக்கின்றது.
இந்த பண்பு முகங்கள் எவ்வாறு வெளிகட்டப்படுகின்றது என்பதனை பொறுத்தே அவன் சமுதாயத்தினால் தீர்மானம் செய்யப்படுகிறான்...
No comments:
Post a Comment