உலகில் முதலாவது ஏற்படுத்தப்பட்ட சூழலியல் தாக்கம் கொள்ளைப்படுத்தல் (Domestication). மனித வரலாற்றில் இயற்கை சமநிலையில் ஏற்படுத்தப்பட்ட முதல் அத்தியாயத்தின் முதலாவது செயன்முறை இதுவே ஆகும். சுமார் 10000 ஆண்டுகள் முன்னர் மேற்கொள்ளப்பட்ட இம்முதல் முயற்சியினால் சூழலில் கழிவு தேக்கம் தொடர ஆரம்பமானதே சூழல் சமநிலையில் ஏற்பட்ட முதல் எதிர்த்தாக்கமாகும். நாடோடி வாழ்க்கை கோலம் கொண்ட மனிதன் தன் உணவுத்தேவைக்கு விலங்குகளை எல்லைப்படுத்தி செய்யப்பட விலங்கு விவசாயமே கொல்லைப்படுத்தலாகும். இதனால் மனித குடித்தொகை ஒரு குறித்த எல்லையில் தரித்து வாழும் நிர்ப்பந்த சூழலுக்கு ஆளாக்கப்பட்டது. தொடர்ந்து இனப்பெருக்க தேவை, உணவு, இருப்பிடம், பாதுகாப்பு என்று தங்களை தாங்களே விலங்கு நடத்தையில் இருந்து வேறுபடுத்தி பலப்படுத்திய மனிதன் காலவோட்டத்தில் இவ்வுலகின் அதி ஆட்சி உயிரினமாக தன்னை பிரகடனப்படுத்தினான். இந்த தொடர்ச்சியின் விளைவு சூழலை தனக்கு எதுவாக மாற்றும் கடினமான முடிவை எடுத்து அதனை செயற்படுத்தி வெற்றியும் கண்டான்...

ஆனால் இந்த வெற்றிகள் இயற்கை மீள் சமநிலைபடுத்தலுக்கு ஒரு சாதகமாக இருந்தபோதும் அதனால் இவ்வுலகில் இழக்கப்பட்ட இழப்பீடுகள் ஈடுசெய்ய முடியாமலே போனது. குறிப்பாக இன அழிவு.
இந்த நூற்றாண்டில்...
விவசாய உற்பத்தியை மேலோங்க செய்யும் வகையிலும் புதிய குடியிருப்புகளை விஸ்தீரணம் செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட்ட காடழிப்பு செயற்பாடுகள் எண்ணிலடங்காதவை. அவற்றில் குறிப்பாக ஒரு நாட்டுக்குரிய சுதேச இனங்களில் இன அழிவு மற்றும் அழிந்துவரும் அரிதா சில தாவர, விலங்கு இனங்களின் முற்றான இழப்பு என்பன மனித வரலாற்றின் பெரும் செம்புள்ளிகளாகும்.
இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட சில முக்கிய காட்டுத்தீ என
அமேசன் மழைக்காடுகளில் ஏற்பட்ட தீ குறிப்பிட்டு கூறமுடியும். அதே போன்று நேற்று நடந்து முடிந்துள்ள அவுஸ்ரேலிய காட்டுத்தீ. அதுபோன்று
The Black Friday Bushfires (1939), Greek Forest Fires (2007), The Black Saturday Bushfires (2009) முதன்மைப்படுத்தி மேற்கோள் காட்டலாம்.
சூழல் சமநிலையில் சடுதியான இயற்கை அனர்த்தங்களினால் குறித்த பிரதேச உயிரின சாகியம் மீள் புத்துயிர்ப்பு பெற்றுக்கொள்ளும். இதனால் ஏற்படும் இருப்பிடம், உணவு மற்றும் உணவுச் சங்கிலி மற்றும் உணவு வலையில் ஏற்படும் மாற்றங்கள் புதியதொரு தனித்துவ இயற்கை சூழலை தோற்றுவிக்கும். இது பெரும்பாலும் ஆரோக்கியமான கூர்ப்பு நிகழ்வாகவே கருத்தப்படும். உதாரணமாக மெசோசோயிக் காலங்கள் (Mesozoic periods) அதாவது டைனோசர்கள் வாழ்ந்த காலப்பகுதியில் முளையூட்டிகள் மிக குறைவான சூழலியல் செல்வாக்கை பெற்று இருந்தது. காரணம் அக்காலப்பகுதியில் நகருயிர்கள் ஆட்சி உயிரனமாக தங்களை நிலைநாட்டியது. ஆனால் டைனோசார்களின் அழிவை தொடர்ந்து முளையூட்டிகள் பரிணாம வளர்ச்சி பெற்றதோடு சூழலில் தங்களை ஆட்சிபீட உயிரியாக அடையாளப்படுத்தியது. இதனை தொடர்ந்தே மனிதன் வருகின்றான்.

இவ்வாறானதொரு பாரிய சூழல் மற்றம் இடையிடையே ஏற்படுகின்ற சிறிய சூழல் சமநிலையின் மொத்த வெளிப்பாடாக சடுதியாக தென்படலாம் என்பதே இங்கு நாம் புரிந்துகொள்ளவேண்டிய ஒன்று...
எது எவ்வாறு இருந்தாலும் மனிதன் தன்னை அழிவின் பால் தனது கரங்களாலேயே கொண்டு செல்கின்றான் என்பது மட்டும் உண்மை. மிக அண்மைய இயற்கை மீள் ஒழுங்குபடுத்தல்கள் சில வேலை பாரியளவில் உலகளாவிய மீள் ஒழுங்குபடுத்தலைக் கூட தூண்டும் செயற்பாடுகளாக அமையலாம்.
No comments:
Post a Comment