
வாசிப்பு என்பது வெறுமனே மைகள் கொண்டமைந்த காகித கட்டுக்களை நுகர்வது மட்டுமல்ல... மாறாக வாசிப்பு என்பது மனிதனின் புலனுணர்வையும் அது சார்ந்து அருட்டப்படும் மானிட நுண் உணர்வுகளையும் வகைக்குறிப்பதாகும். இந்த சிந்தனை விரிவாக்கம் எப்போது புத்தக விட்டில்பூச்சிகளை தாக்குமோ அப்போதே விட்டில்பூசிகள் தீ-சுடர்களில் வட்டமிட்டு வீழ்ந்து மடிவது இழிவலவாகும்...
புலனுணர்வை பொருத்தமட்டில் பார்த்தல், கேட்டல், தொடுதல், சுவைத்தல், நுகர்தல் என்பதை குறிக்கும். இவ்வாறே வாசிப்பு என்பது வகைப்படும். அவை வெறுமனே ஏடுகளில் எழுதப்பட்ட எழுத்துக்களின் கோர்வை மற்றும் சொற்களின் கோர்வையை மீட்டுவது மட்டுமல்ல...
அவதானிப்பு என்ற முக்கிய கற்றல் தளம் இவ்வாசிப்பின் முக்கிய தொழிற்பாடு தளமாக காணப்படுகின்றது. எனவே வாசிப்பு என்ற ஒற்றை சொல் கொண்டமைந்துவரும் பரந்துபட்ட கருத்துருவை நாம் மக்கள் மன்றத்தில் தெளிவூட்டுவோம். ஏனெனில் வாசிப்பு அறிவு பரிணாமத்தின் தொடர்ச்சியான வளர்சிபோக்கை எடுத்துரைப்பதாகும்...
No comments:
Post a Comment