
அரசன் எப்போதும் களத்தில் நிற்கும் குறுநில ராஜாக்களுக்கு இணையான ஊரில் செல்வாக்குமிக்க ஒரு நபருடனும் தொடர்பில் இருந்துகொண்டே இருப்பார். இதனால் குறுநில ராஜாக்கள் அரசனின் தொடர்ச்சி உறவைப்பேன அரசனின் தலையாட்டி பொம்மைகளாக இயங்குவதோடு மட்டுமன்றி எதிர்த்துக் குரல்கொடுக்கும் தன் உரிமைக் குரலைக்கூட தன் சுயலாபத்திற்காக இழந்துவிடுவார்.
மேற்படி ஆதி அரசியல் கலாசாரம் இன்றளவும் அரசியல் மேட்டுக்குடி மக்கள் தொடக்கம் அடித்தட்டு ஆதரவாளன் வரைக்கும் நடைமுறையில் இருந்து வருகின்றது என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.
எனவே...
ஊருக்கான பிரதிநித்துவ விடையத்தில் கீழ்காணும் தீர்க்கமான தீர்மானங்கள் இம்மூதூர் சமூகத்தினால் எடுக்கப்பட வேண்டும். இதனை விரும்பியோ விரும்பாமலோ மூதூர் மஜ்லிஸ் சூரா, மற்றும் அதன் கீழ் இயங்கும் ஏனைய சங்கங்கள், மற்றும் சுயாதீனமாக இயங்கும் சமூக சங்கங்கள் ஒருகுடையின் கீழ் ஊருக்காக ஒன்றிணைய வேண்டும்....
👉 ஊர் சார்பாக ஒருவர் மட்டும் நியமிக்கப்படவேண்டும்...
👉 ஊரின் முக்கிய பிரச்சினை பற்றிய ஒப்பந்த பத்திரம் முன்வைக்கப்படவேண்டும்.
👉 தகுதியான மாவட்ட ரீதியில் செல்வாக்குமிக்க அரசியல் அனுபவம் கொண்ட ஒருவர் தீர்மானிக்கப்பட வேண்டும்.
👉 எம்மிடம் உள்ள வாக்கு வங்கி (24580) ஏற்றால்போல் இழிவளவில் வேற்பாளரை பெற்றுக்கொள்ளும் நடைமுறை சாத்தியம் கொண்ட அரசியல் வியூகத்தையும் அதற்கான வாயல்களையும் தேர்வுசெய்யவேண்டும்.
👉 ஊர் ஒன்றுபடும் வேளையில் எதிர்த்துநிற்கும் எந்தவொரு அரசியல் வாதியையும் இந்த ஊர் முற்றாக புறக்கணிக்க வேண்டும்...
👉 பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து நடக்கவிருக்கும் மாகாணசபை தேர்தலுக்கும் நாம் தற்போதே களம் அமைக்க வேண்டும்.
👉 முக்கியமாக முஸ்லிம் பிரதிநிதிகள் மாவட்டத்தில் மூவர் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை தொடர்ந்தும் தக்கவைக்க கிண்ணியாவில் இருந்து இருவரும் மூதூரிலிருந்து ஒருவரும் பெற்றுக்கொள்ளும் வகையிலான ஏற்பாட்டை சாதுரியமாக மேற்கொள்ளவேண்டும்.
No comments:
Post a Comment