பதினான்கு நூற்றாண்டுகள் முன்னரே யுத்தபயிற்சி, போர்கலை மற்றும் வியூகம், உடலியல் ரீதியாக வலுவூட்டிய குதிரை பயிற்சி, அம்பெய்தல், நீச்சல் மற்றும் வீர விளையாட்டுக்கள் என்று பெண்களை வலுவூட்டிய சிந்தனைபோக்குகள் கூட இன்றுள்ள இஸ்லாமிய சமூகத்திலில்லை என்றுதான் கூறவேண்டும்...
சமகால சூழலில் கருத்துச்சுதந்திரம் தொடக்கம் கற்புச்சுதந்திரம் வரை நாவளவில் மட்டும் பேசும் நாம் நடைமுறை வாழ்வியலில் எம் இரத்த உறவுகள் தாண்டி எமது அதிகார மேலிடுகையை முன்வைப்பதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது... இந்த நடைமுறை கலாசாரம் ஒருவகை பிற்போக்கு பெண்ணியல் வாதத்தை ஆதரிப்பதோடு அதற்கு முட்டுக்கொடுக்கும் ஆணாதிக்க போக்கையும் காட்சிப்படுத்துகின்றது.
சமூக வலைதள உரையாடலில்...
"பெண்களை பள்ளிவாயலில் இறைவனை வணங்க அனுமதிக்க மறுக்கும்" சமூகத்தில் இருந்துகொண்டு சமூக வலைத்தள கருத்துச்சுதந்திரம் பற்றி பேசுவது என்பது ?????
அவ்வாறு இருந்தும் இன்றுள்ள தலைமுறையின் சில பெண்கள் தங்கள் ஆற்றல், ஆளுமைகளை இச்சமூகத்தின் வளர்சிக்காக ஆகக்குறைந்தது தங்களின் சுய ஆளுமை வளர்சிக்காக எத்தனிக்கும் போதெல்லாம் இங்குள்ள பிற்போக்கு புறம்போக்கு வாதிகளின் வசைபாடல்களுக்கு நேரடியாக தாக்கப்பட்டு தங்களின் ஆளுமை வெளியீடுகளை கூட பொது அவையில் முன்வைப்பதை விட்டும் ஒதுங்கி விடுகின்றார்கள்....
இவ்வாறான தொடர்ச்சியான போக்கு நடைமுறை சூழலுக்கு எப்போதும் சாதகமாக அமையாது. ஏனெனின் காலத்தின் தலைமுறை இடைவெளியின் மாற்றம் விரும்பியோ விரும்பாமலோ நாம் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்... இருந்தும் அவை ஆரோக்கியமாக இருக்கும்போது வாழ்த்துவதும் ஆரோக்கியமற்றதாய் உள்ளபோது முறையாக வழிகாட்டியும் நடப்பதுவே அடுத்த தலைமுறைக்கான ஆளுமை ஆக்க வழிகோலும்...
இல்லையேல் எம்மால் உருவாக்கப்படவிருக்கும் எம் குழந்தைகள் கூட இந்த சமூகத்திற்கு பயனன்ற ஒன்றையே கடைசிவரை வாழ்த்து மடியும்...
No comments:
Post a Comment