
இவ்வரிசையில் மூன்றாம்நிலை பிரிணாம நிலையாக தொழிற்ப்படுவதே சித்திரங்கள், ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள்.
இஸ்லாமிய அகீதா நிலையில் ஹராம், ஹலால், மக்ரூ பற்றிய எண்ணக்கரு காலவோட்டத்தில் மாற்றம்பெரும் தளம்பல் நிலை சட்டாவாக்கம் அன்று என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ளவேண்டும். அவ்வாறான தளம்பல் நிலை சட்டவாக்கம் காணப்படின் இதுவரை நிலைத்த உறுதியான மார்க்கத்தின் அடிப்படையில் ஆட்டம்காண வைத்திருக்கும்.
இலக்கியங்கள் மனித நாகரீகத்தோடு ஒன்றித்து பயணிக்கும் ஒரு மானிட மனோவியல் வெளிப்பாட்டு ஊடகமாகும். இந்த ஊடகம் பண்டைய கற்கால மானிடன் தொடக்கம் இன்றுள்ள கம்பியூட்டர் கால மனிதன் வரை சமாந்தர நடத்தையை கொண்டுள்ளது.
இஸ்லாத்தின் பரம்பாலக்கம் சில முக்கிய எல்லைமீறல்களை வரையறை செய்ததே தவிர அது ஓவியங்கள் தொடர்பான சடவாத கருத்தை ஒருபோதும் முன்வைக்கவில்லை என்பதே இஸ்லாமிய வரலாறு கற்றுத்தரும் பாடம். இந்த அடிப்படையில் ஆபாசம், இழிவுநிலை கேளிக்கை, கண்ணியம் மற்றும் இறையியல் சமத்துவம் தொடர்பிலான எண்ணக்கருக்களே தடைசெய்யப்பட்டதே தவிர மனித உளவியல் வெளிப்பாட்டை சித்தரிக்கும் வகையிலான மற்றும் அறிவூட்டல் தொடர்பிலான வெளியீடுகளுக்கு பூரண சுதந்திரம் அளிக்கப்பட்டது.
பல்லின நாட்டுச்சூழலில் எமது ஒருமைப்பாடும் கலாசார ரீதியான எல்லைப்பரப்பும் மிகத்தெளிவான அறிவார்ந்த சமூகத்தின் கைகளில் தங்கியுள்ளது என்பதையே இதுவரை வெளியான சுவரோவியங்கள் சித்தரிக்கின்றன. இருந்தபோதும் எம்மிடம் வெளிப்படையாக பேசமுடியாத பல உள்ளார்ந்த வகிபாகம், சாட்டவக்கம், சடங்கு சம்ரதாயம், உரிமைகள், சலுகைகள், மற்றும் சமூகப் பிரச்சினைகள் கொட்டிக்கிடக்குகின்றன. அவைபற்றியும் சுவரோவியங்களில் வெளியீடு செய்யலாம் என்பதே என்னுடைய நிலைப்பாடு....
இதனூடாக பெரும்பான்மை சமூகம் சிறுபான்மை தொடர்பிலான மனோவியல் நிலையை புரிந்துகொள்ளகூடும்.
ஓவியங்கள் தொடர்பில் நாம் நெகிழ்வு நிலை மதப்போக்கை கையாள்வது காலத்தின் சிறந்த நிலைப்பாடு என்பதே இங்கே நாம் பேசவேண்டிய விடயதனமே தவிர அதுகுறித்து விவாதிக்கவும் விதண்டாவாதம் கருத்துப்பரிமாற்றமும் நிகழ்த்தும் தருணமல்ல என்பதுமே இங்கே நான் கூறமுனைந்த விடயம்.
"பூமியில் சுற்றித் திரிந்து, தமக்கு முன் வாழ்ந்து சென்றவர்களுக்கு நேர்ந்த கதியை இவர்கள் காணவில்லையா? பூமியில் இவர்களைவிட மாபெரும் தடயங்களை விட்டுச் சென்றிருக்கின்றார்கள்" (அல்குர்ஆன் 40:21, 82)
No comments:
Post a Comment