
ஒவ்வொரு உயிரும் DNA சார்ந்தே தங்களில் உடல், உள குணாதிசியங்களையும் பல்வகைமையும் காண்பிக்கும். அது நுண்ணங்கியாக இருந்தாலும் சரியே..
அந்தவகையில் மனிதனின் DNA 23 சோடி (46) குரோமோசோம்களை (Chromosome) கொண்டு காணப்படப்படும். இது தாய், தந்தையின் புணரி கலங்களில் இருந்து பெறப்படுகின்றது. சில விந்து அணுக்களில் காணப்படும் குரோமோசோம்களின் இழப்பு மற்றும் அதிகரிப்பு பிறக்கும் குழந்தைகளில் பல உடலியல் குறைபாடுகளை ஏற்படுத்த காரணமாகும். இவ்வாறான ஒரு DNA சார்ந்த குறைப்பாட்டு நோய்தான் டவுன் சிண்ட்ரோம்.

டவுன் சிண்ட்ரோம் குறைபாடு ஆயிரத்தில் ஒருவருக்கு ஏற்பட்டுவிடுகின்றது. பொதுவாக மனிதனின் உடலின் கலங்களில் 46 குரோமோசம்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் இந்த குறைபாடிற்கு ஆளானவர்களுக்கு 21ஆவது ஜோடி குரோமோசோம்களில் கூடுதலாக ஒரு குரோமோசோம் இடம் பெற்றுவிடும். ஆக குறைபாடு தாக்கத்திற்கு ஆளானவர்களின் உடம்பில் 46 குரோமோசோம் என்று சரியான எண்ணிக்கைக்கு மாறாக 47 குரோமோசோம்கள் காணப்படும். இந்த மரபணு குறைபாடே டவுன் சின்ட்ரோம் என்னும் குறைபாடிற்குக் காரணமாகும்.
#டவுன்ஸ்_சிண்ட்ரோம்_அறிகுறிகள்
டவுன் சிண்ட்ரோம் குறைபாடு கொண்ட குழந்தைகள் பின்வரும் உடலியல் குறைபாடுகளை பிரதானமாக சிறிய தலை, குறுகிய கழுத்து, நாக்கு ஊடுருவி, தட்டையான முகம், மேல்நோக்கி சாய்வான கண் இமைகள், பலவீனமான தசை அமைப்பு, அதிக நெகிழ்வுத்தன்மை, உயரம் குறைவு போன்றவற்றை காண்பிப்பார்கள்.
#டவுன்_சிண்ட்ரோம்_நபர்களின்_தேவைகள்
பொதுவாக இக்குழந்தைகள் உடல், உள ரீதியாக சோர்வடைந்தவர்களாகவே காணப்படுவார்கள். ஆனாலும் அவர்களுக்கு நாம் அளிக்கும் தனித்துவ பயிற்சிகள், ஊக்குவிப்பு, உளவியல் தைரியம் என்பன ஓரளவு சமுதாய பிராணியாக மற்றும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அந்தவகையில்...
👉 நுண்ணறிவு ஒப்பீட்டளவில் மந்தம் என்பதனால் கற்றல் திறன் பலவீனமாக இருக்கும். ஆனாலும் நினைவாற்றல் அடிப்படையில் சில ஆபத்தற்ற தொழில் பயிற்சி வழிகாட்டல் அளிக்க முடியும். உதாரணமாக தையல், பேக்கரி, தோட்ட வேலை...
👉 பலருடன் உரையாடும் சந்தர்பத்தையும், சடங்கு, சம்ரதாயங்கள் மற்றும் நிகழ்வுகளில் பங்கெடுக்கும் சந்தர்பத்தையும் அளிக்கும் வேளையில் இயல்பாகவே ஆன்மிகம், பேச்சு, மொழி, பண்பாடு, ஆடை அலங்காரம், தொடர்பாடல், தொழில்நுட்ப சாதனங்களின் கையாடல் போன்றவற்றில் இயல்பாக நடந்துகொள்ள முயல்வார்கள்.
👉 குறிப்பாக தங்கள் சுய வேலைகளை தாங்களாக செய்யும் தைரியத்தையும், பழக்கத்தையும் பயிற்றுவிக்கவேண்டும்.

👉 உடலியல் ரீதியான பாலியல் தேவைகள் குறித்தும் கரிசனை எடுக்கவேண்டும். (குழந்தை பெரும் தகமை இவர்களுக்கு இல்லை. ஆனாலும் குடும்ப வாழ்வை வாழும் திறன் கொண்டு இருப்பார்கள்)
சமூகமட்டத்தில் இவ்வாறான குழந்தைகளை இழிவாகவும், வெட்கமாகவும் மற்றும் இயலாமை உடையோராகவும் காணும் பிற்போக்கு நடைமுறை இருந்து வருகிறது. உண்மையில் அது தவறான புரிதல்தான். ஏனெனில் சாதாரண மனிதர்கள் போன்று உடல், உள தேவைகள் யாவும் இவர்களுக்கு உண்டு. அதனை மதிப்பளித்து அவர்களையும் சமூகத்தில் பயனுள்ள மானிட வளமாக பயன்படுத்த இச்சமூகம் முன்வரவேண்டும்.
No comments:
Post a Comment