
மூதூர் மண் வரலாற்று ரீதியாக மிக நீண்ட தொன்மை பின்னணியை கொண்டமைந்து காணப்படுவதே அதன் பெயர் காரணத்தின் சிறப்பம்சம். இந்த பின்னணியில் வரலாற்று ரீதியாக தங்கள் சமூகத்தார் தங்களின் பண்பாட்டு பாரம்பரிய அடையாளத்தை ஏதோவொரு வகையில் வெளிகாட்டிய வண்ணமே இருந்து வந்துள்ளார்கள்.
இலங்கை வரலாற்றில் தனக்கென ஒரு அத்தியாத்தை வரலாற்று நெடுகிலும் வரைந்த மண்ணே கொட்டியாபுரப்பற்று என்று அழைக்கப்படும் பூமி. நெய்தல் தொடக்கம் மருதம் வரை நா-வகை நிலங்களையும் உள்ளடக்கிய பொக்கிசப்பூமியே இது. பல்லின மொழி கலசாரம் மற்றும் பாரம்பரியம் என்று பல பண்பாட்டியல் சிறப்பியல்புகளையும் இனரீதியாக நாவகை மானிட வளத்தையும் உள்ளக்கிய குறை தன்னிறைவு பொருளாதார கட்டமைப்பை கொண்ட ஒரு பிரதேசமும் இதுவாகும்.

அந்தவகையில் 615 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டிருந்த இப்பிரதேசம் பிற்பட்ட காலங்களில் முன்னெடுக்கப்பட்ட செயற்திட்டங்கள், குடியேற்ற அறிமுகத்திலும் நிலத்துண்டாக்கம் திட்டமிட்டே வெளிப்படையாக அரங்கேறியது. இதனை தொடர்ந்து கொட்டியாபுரப்பற்று நிலம் மூதூர் (179.4 ச.கி.மீ), சேருவில (346 ச.கி.மீ), ஈச்சிலம்பற்று (89.4 ச.கி.மீ)என்ற மூன்றும் பிரதேச பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அவற்றுக்கான அரசாங்க நிர்வாக அலகும் பங்கீடு செய்யப்பட்டது.

புவியியற் பின்னணியில் வரல் வலய எல்லைக்குள் உள்ளடங்கும் இப்பகுதியின் ஆண்டுக்கு சாரசரி வெப்பநிலை 28.7℃ உம் 1700 mm மழைவீழ்ச்சியும் கொண்டிருப்பதோடு பருவப்பெயர்ச்சி காற்றுக்காலம் கொண்ட பகுதியாகவும் இது இனங்காணப்பட்டுள்ளது.
























No comments:
Post a Comment