
அந்தவகையில் ஒலியின் சேர்கை கொண்ட ரசனைக்கு ஏற்றால்போல் ஒருங்கிணையும் ஓசைகள் இசை என்ற நிலையை அடைகின்றது. இவ்வாறு வெளிவரும் இசையின் அதிர்வு மற்றும் அலைநீள ஒழுங்குகளுக்கு ஏற்றால்போல் அதன் உரப்பு (சத்தம்) மாறுபடும். இவ்வாறான சத்தம் ஒவ்வொரு மானிட மனோவியல் இயல்புகளுக்கு ஏற்றால்போல் பல்வகைமை கொண்டது. இதனால்தான் ஒருவருக்கு பிடித்த ஒரு இசைவகை இன்னொருவருக்கு பிடிக்காது போகின்றது.
எமது மூளையில் மூளையம் (Auditory cortex) என்ற பகுதியில் தான் இசை/ ஒலிக்கான உணர்வு பிரிகை வாங்கிகள் காணப்படுகின்றது. இவை உட்காதில் காணப்படும் ஒலி வாங்கி நரம்புகளுடன் நேரடி தொடர்புகொண்டு காணப்படுகின்றது. பொதுவாக மூளையின் இப்பகுதியில் இசைக்கான சேமிப்பகம் காணப்படுகின்றது.
இசை மருத்துவம் (Music Therapy)
நரம்புத் தொகுதி தொடர்பான சில உடலியல் குறைபாடுகளையும் மற்றும் உளவியல் ரீதியான கோளாறுகளையும் நிவர்த்தி செய்யப்பயன்படும் நவீன மருத்துவமுறைமையே இசை மருத்துவமாகும். இம்முறையில் பொருத்தமான மீடிறன் கொண்ட அலைவுகள் காதினூடாக மூளை நரம்புகளையும் அதன் இணைப்புகளையும் தூண்டுவதனூடாக மீள் இயக்கம் செய்ய பயன்படுகின்றது.

👉 இயக்கமற்று காணப்படும் சில மூளைய நரம்பு இணைப்புகள் தூண்டப்பட்டு புத்துயிர்க்கப்படும்.
👉 மன அழுத்தம் குறைவடையும்.
👉 இதய அடிப்பு சீராக்கப்படும். இதனால் குருதிப்பாய்ச்சல் சீர்படும்.
👉 உடலின் கொன்நிலை ரீதியான நோய்களான இதுபார்கின்சன் மற்றும் அல்சைமர் நோயை நிர்வகிக்க உதவும்.
👉 வயதானவர்களுக்கு மனச்சோர்வு குறைக்கும்.
👉 ஸ்கிசோஃப்ரினியா உள்ளிட்ட உளவியல் கோளாறுகளின் அறிகுறிகளைக் குறைக்கும்.
👉 சுய வெளிப்பாடு மற்றும் தகவல்தொடர்புகளை மேம்படுத்தும்.
👉 கோபம், பிடிவாதம், கடின மனோவியல் பண்பு கொண்ட குழந்தைகளை இசை பயிற்சி மூலமாக மென்மை குணம் கொண்டவர்களாக மாற்றமுடியும்.
👉 தூக்கமின்மை, கவலை, ஆழ்ந்த யோசனை கொண்ட நபர்களை பொருத்தமான மெல்லிசை இயல்பு நிலைக்கு மாற்றக்கூடியது.
👉 இசை பயிற்சி மூலமாக சில திறன்களை மேம்படுத்த முடியும். குறிப்பாக
💓 தொடர்பு திறன் (குரல் / வாய்மொழி ஒலிகள் மற்றும் சைகைகளைப் பயன்படுத்துதல்),
💓 சமூக திறன்கள் (கண் தொடர்பு கொள்ளுதல், திருப்புதல், தொடர்புகளைத் தொடங்குதல் மற்றும் சுயமரியாதை)
💓 உணர்ச்சி திறன்கள் (தொடுதல், கேட்பது மற்றும் விழிப்புணர்வு நிலைகள் மூலம்)
💓 உடல் திறன்கள் (சிறந்த மற்றும் மொத்த மோட்டார் கட்டுப்பாடு மற்றும் இயக்கம்)
💓 அறிவாற்றல் திறன்கள் (செறிவு மற்றும் கவனம், சாயல் மற்றும் வரிசைப்படுத்துதல்)
💓 உணர்ச்சி திறன்கள் (சொற்களின் சொற்களின் வெளிப்பாடு)
மென் இசை/ ராகம் நயம் கொண்ட நபர்கள் இயல்பாகவே மென்மை குணவியல்பு (Soft Skills) மற்றும் அன்பு, காதல், மன்னிப்பு மற்றும் விட்டுக்கொடுப்பு போன்ற பண்புகளில் அதியுயர் தன்மை கொண்டவர்களாக காணப்படுகின்றார்கள் என்பது மனோ தத்துவம் கூறும் அறிவியல் உண்மை.
இசை மருத்துவதின் நன்மைகள் தொடர்பில் Max Planck Institute for Human Cognitive and Brain Sciences, Leipzig, Germany நிறுவனத்தின் தலைமை ஆய்வாளரான கிறிஸ்டோபர் ஸ்டீல் மேலுள்ளவாறு கூறுகின்றார். Scientific American, Nature ஆகிய பத்திரிகைகளிலும் நரம்பியல் தொடர்பான நூல்களிலும் இதே கருத்து வெளியாகி இருக்கிறது. மேலும் இசை பயில்பவர்களுக்கு, பல மொழிகளைக் கற்கும் திறன் அதிகரிக்கும் என்றும் பெரும் இரைச்சலில் இருந்து சொற்களைப் பிரித்தெடுக்கும் சக்தி அதிகம் என்பதையும் Journal of Neuro science இதழ் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அடுத்து, வயது மூப்பின் காரணமாக மூளையின் செயல்பாடு குறையும் என்பது பொது விதி. ஆனால் இசை கற்று தொடர்ந்து பயிற்சி செய்வோரிடம், மூளைத் தேய்மானம் அந்த வேகத்தில் இல்லை. நினைவாற்றல் தேர்விலும், வேகமாக எதையும் புரிந்து கொள்ளும் தேர்விலும் இசை பயின்றவர்கள் அதிக மதிப்பெண் பெறுகிறார்கள் என்பற்கான ஆதாரத்தை 2012 July issue of Frontiers in Human Neuroscience வெளியிட்டுள்ளது.
இஸ்லாத்தின் பார்வையில் இசையியல் கூடும், கூடாது என்ற சர்ச்சைக்குரிய காரணியாக இது இருந்தபோதும் அல்குர்ஆனிய ஒலிப்பாங்கின் உயர்ந்த தன்மை இவ்விடத்தில் சுட்டிக்காட்டப்படவேண்டிய விடயதானம்தான்...
No comments:
Post a Comment