இவ்வாறானவர்கள் வேறு யாருமால்ல....
எம் அயல் வீட்டார்கள், நண்பர்கள், எம்மோடு அலுவலகங்களில் வேலை செய்பவர்கள், அன்றாடம் நாம் பள்ளியில் எம்மோடு தோள்சேர்த்து தொழுபவர்கள், இன்னும் நமது சமூக அமைப்புகளில் ஆர்வத்தோடு சமூக சேவைகள் செய்பவர்கள் என்று அடிக்கிக்கொண்டே செல்லலாம்...
சமூக பார்வையில் நல்ல தொழில்முறை, வாகனம், ஆடைகள், வீடு மற்றும் தொலைபேசி என்று சமூக ஆடம்பர பொதுப்புத்தி தோற்றத்தை வெளிகாட்டி நின்றபோதும் தங்கள் அன்றாட வாழ்கையின் அடிப்படை தேவைகளான குழந்தைகளின் கல்வி, பாடசாலை உபகரணங்கள், ஆடை அலங்காரங்கள் மற்றும் வீட்டுப்பவனை பொருட்கள் தொடக்கம் அன்றாடம் உண்ணும் உணவு வரை படுமோசமான நிலையில் வாழ்க்கைக் கோலத்தை மெல்லமெல்ல நகர்த்துவார்கள்...
சமூக கட்டமைப்பில் அடித்தட்டு மக்களைவிடவும் மிக மோசமான நிலையில் கௌரவ தொழில்புரியும் இவ்வாறான அரச ஊழியர்கள் பலர் இக்குழுமத்தில் இணைக்கப்படவேண்டியவர்கள்.
குறித்த நபர்களை நாம் எவ்வாறு இனங்கண்டு கொள்வது என்ற முறையான அணுகுமுறையை இன்னமும் எமது சமூகம் கற்றுக்கொள்ளாததன் விளைவே தொடர்ந்தும் குறிப்பிட்ட சில அநாதைகளுக்கும், சமூகப்பொதுப்புத்தி குருட்டுப் பார்வையில் இனங்காணப்பட்ட வரியா குடும்பத்திற்கும் உதவிகள் குவிந்தவண்ணம் காணப்படுகின்றது.
குறிப்பாக வெளிநாட்டு உதவிகள் கூட தந்தை இல்லாத பிள்ளைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற நிர்பந்த சூழல் காரணமாக கணவனை விட்டு பிரிந்த குடும்பங்கள் பல நடுத்தெருவில் அநாதைகளை விடவும் கேவலமான நிலைக்கு தள்ளப்பட்டதோடு மட்டுமன்றி சமூகத்தின் குற்றங்களான விபச்சார நிலைக்கும் முகம்கொடுக்க நேரிடுகின்றது.
#குறித்த_தரப்பாரை_இனங்கானும்_வழிமுறைகள்...
👉 உங்களோடு உறவாடும் அயலவர்கள், நண்பர்கள், சமூக சேவையாளர்கள் வீட்டிற்கு வாரம் ஒருமுறையேனும் தரிசித்து குடும்ப உறவுகளுடன் குறிப்பாக குழந்தைகளுடன் மனம்திறந்து பேசுங்கள்.
👉 குறிப்பாக ஆசிரியர்கள் தங்கள் கீழுள்ள கல்வியில் ஆர்வமிக்க குழந்தைகளின் குடும்ப பொருளாதார பின்னணி பற்றி மிக ஆழாமாக அறியவேண்டும்.
👉 பாசாங்கு முறையில் கடன் கேட்டுப்பாருங்கள். சிலவேளை அவர்களின் கஷ்டத்தை கூறுவார்கள்.
👉 குறித்த நபர்களின் குடும்ப உறவினர்களை அணுகி ஆராய்ந்து பாருங்கள்.
👉 தொழில் சூழல், வரத்தக நடவடிக்கை மேற்கொள்ளும் சூழலில் குறித்த நபர்களின் கடன், கொடுக்கல் வாங்கல் பற்றி விசாரணை செய்யுங்கள்.
உங்களின் அணுகுமுறையில் சிலரின் கடன்சுமை, கல்வி செலவீனம், வாழ்வாதார இழுபறி பற்றி அறிந்துகொள்ள வாய்ப்பாகும். அவ்வாறான சந்தர்பங்களில் உங்களால் உதவமுடியாவிட்டலும் உதவக்கூடிய நல்லுள்ளங்கள் பல இருக்கின்றது. அவர்களை அணுகி குறித்த நபர்கள் பற்றிய தகவலை மறைமுகமாக வழங்கலாம்.
#உதவி_அளிக்கும்_முக்கிய_தருணங்கள்...
👉 புதுவருட பாடசாலை பொருட்களுக்கான கொள்வனவுத் தருணம்
👉 பெருநாள் காலங்களில் ஆடை அலங்கார சந்தர்பம்
👉 முக்கிய சமூக கொண்டாட்டங்களில் (விடுமுறை சமையல், சுற்றுலா) போது வாழ்வாதார தேவைகளை நிறைவு செய்தல்.
👉 தொழில் வாய்ப்பு அற்று இருக்கும் குறித்த குடும்பத்தின் குழந்தைகளுக்கு தொழில் வழிகாட்டல் மற்றும் வாய்புகள் பற்றி தெளிவூட்டல் மற்றும் வழிவகை செய்தல்.
👉 மின்னிணைப்பு, வடிகாலமைப்பு, கிணறு, மலசலகூடம், குடிநீர் வசதிகள் அளிக்கும் நிறுவங்களை அணுகும் முறைகளை விளக்குதல்.
👉 கடன் சுமைகளை பொறுப்பேற்றல்.
"நிச்சயமாக தானதர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; இன்னும் அல்லாஹ்வுக்கு அழகான கடனாகக் கடன் கொடுத்தார்களே அவர்களும் அவர்களுக்கு அதன் பலன் இரு மடங்காக்கப்படும்" (அல்குர்ஆன் 57:18)
No comments:
Post a Comment