
காலத்திற்கு ஏற்ற தலைமுறை இடைவெளியின் வெளிப்பாடும் அத் தலைமுறையின் தேவைப்பாடுகளான விருப்பு, வெறுப்பு சார்ந்த அச்சமூகத்தின் கூர்ப்பு வளர்ச்சியும் விருத்தியும் காணும். இந்த பரிணாம வேகம் காலம், இடம், தேவைகள் மற்றும் தலைமுறை இடைவெளி என்பவற்றைச்சாடி ஒவ்வொரு மக்கள் வெளிக்கும் வேறுபாடும்.
மத்திய கால ஐரோப்பிய தொடக்கம் இன்றுவரையுள்ள உலகளாவிய போக்கை எடுத்துக்கொண்டால் ஆரம்பத்தில் மதம் சார்ந்து அதிகார வர்கத்தினர் தொடர்ந்து கலாசாரம், பொருளாதாரம், ஆயுதம், மற்றும் உற்பத்தி திறன் என்று முன்னேறி தற்போது தொழிநுட்ப பரம்பரையை அணுகியுள்ளார்கள். ஆனால் ஒவ்வொரு அதிகார வர்க்கத்தாரையும் கட்டுப்படுத்தும் தலைமைபீடம் எப்போதும் அரசியல் வகுப்பார்களிடதிலே காணப்பட்டுள்ளது என்பதுதான் இங்கே நாம் புரிந்துகொள்ளவேண்டியது.
ஆக அதிகாரத்திற்கு அதிகாரம் அளிக்கும் அந்தஸ்து எப்போதும் அரசியலுக்கே இருந்துவந்துள்ளது என்பதே வரலாற்று கற்றுத்தரும் பாடம்...
"அரசியல் அதிகாரம் அற்ற ஒரு சமூகம் வேசியின் நிலைக்கு ஒப்பாகும்"
ஏனெனில் வேசி எப்போதும் தன்னிடம் உள்ள உடல், உள, சமூக பலத்தை பயன்படுத்தாது பணத்திற்கும் இதர சில்லறை தேவைகளுக்கும் தன்னிடமுள்ள பலத்தை பலவீனமாக்குவாள். இந்த தேவைப்பாட்டை உணர்ந்த முதலாளிகள் விலங்குகள் போல் தீனி மட்டும் அளிக்கும் அடிமைகளைபோல் நடாத்துவார்கள். இந்த அடிமை உணர்வை உணரும் வாய்ப்பும் அச்சமூகத்திற்கு வழங்கப்படமாட்டாது. ஏனெனில் குறுகிய அடிப்படை தேவை உணவு தொடர்ச்சியாக கிடைக்கின்றது என்பதனால்...
மேற்படி போக்கைத்தான் அரசியல் அதிகாரம் அற்ற அரசியல் அனாதை சமூகம் தலைமுறை தலைமுறை ரீதியாக அனுபவிக்கும்...
இக்கலாசாரம் மாற்றப்படவேண்டுமாயின் முதலில் வேசியே தன்னிடம் உள்ள பலத்தையும் பலவீனத்தையும் அறிதல் முக்கியம்...
No comments:
Post a Comment