
சமூகமொன்று தனக்கான அரசியல் அதிகாரம் பெற்றுக்கொள்ளும் போராட்டம் என்பது அச்சமூகத்தின் மிகநீண்ட தூரநோக்கு இலக்காகவும், அது ஒரு இலச்சிய நோக்கு கொண்டதாகவும் அமைவதும்; அதனை அடைந்துகொள்வதில் சமூகத்தின் முழு அங்கீகாரமும் கிடைக்கப்பெறும் வேளையிலையே இது சாத்தியமாக்கப்படுகின்றது.
காலாகாலம் நடைமுறை அரசியலில் பொதுமக்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினைதான் புத்துயிர்பான புதுத்தலைமுறை இளைஞர்களின் பங்களிப்பும், பிரவேச வெற்றிடமும். குறிப்பாக இளைஞர்கள் அரசியல்வாதிகளின் பின்னால் அல்லக்கைகளாக அடையாளம் காண்பித்த பிற்போக்குவாத ஆதிச் சித்தாந்தம் தகர்த்தெரியப்பட்டு புதிய அரசியல் கலாச்சாரத்திற்கு ஆர்வமுள்ள, ஆளுமைமிக்க இளைஞர்களை சமூகம் அடையாளம் கண்டு அவர்களை வழிநடத்தும் அனுபவ அரசியல்சார் ஆளுமைகள் முன்வரவவேண்டும்.
ஆயுள்கால தலைமைகள், குடும்ப அரசியல், வாரிசுரிமை அரசியல் கலாசாரம் என்பன தொடர்ந்தும் சமூக மட்டத்தில் வியாபிக்க மேற்படி காரணி தூண்டுகோலாக இருந்துவந்துள்ளது. இந்நடைமுறை பல்லின சமூகத்தில் சிறுபான்மையாக வாழும் சமூகத்தாருக்கு அரசியல் அதிகார அந்தஸ்தை தொடர்ந்தும் வெற்றிடமாக்கும்.
பேரம்பேசும் சக்திகள் வலுவூட்ட எம்மிடம் உள்ளார்ந்த ஒருங்கிணைவு மிக முக்கியம். அத்தோடு எம்மிடமுள்ள அரசியல் வகிபாகம் குறித்தும் நாம் பொதுப்படையாக விமர்சன கலந்துரையாடல் ஆரோக்கியமளிக்கலாம்...
மேற்படி விடயதானத்தின் அடித்தளம் எப்போதும் பலமானதாகவும் அதனை தாக்குப்பிடிக்கும் சமூக தலைமைகள் எதிர்நிலை தாக்குதல் கைவசம் உள்ளதாகவும் இருக்கும் பட்சத்தில்தான் உள்ளக தாகுத்தல், குழிபரிப்புகள் மற்றும் நம்பிக்கை துரோகங்களை சமாளிக்க முடியுமாகும்....
No comments:
Post a Comment