
அச்சம் இருக்கும் இடத்தில் நம்பிக்கை குடியிருப்பது போல்; நம்பிக்கை நிறைந்த இடத்திலே அச்சமும் ஒளிந்திருக்கும். இதனால்தான் மனிதன் தனித்துவ அடையாளத்தை இனிய உயிரியில் இருந்து வெளிக்காட்டுகின்றான்.
அரசன் தொட்டு அடிமை வரையும் படைத்தவன் தொட்டு பக்தன் வரையும் இந்த அச்சமும், நம்பிக்கையுமே பிரதான பங்கை தீர்மானிக்கின்றது.
கோட்பாட்டியல் ரீதியான சிந்தனைகள் கூட அச்சம், நம்பிக்கையின் ஓரிணைந்த சித்தாந்த கூரை மறுக்கவில்லை. அச்சம், நம்பிக்கையின் ஒட்டுமொத்த விளைவாக பக்தி வெளிப்படுகின்றது. இதனை கொண்டே பல மதங்கள் இன்று அட்டூழியங்களும், மடமை வேதியல் விதிமுறைக்கும் முட்டுக்கொடுத்து மனிதம் என்ற உலகளாவிய மேன்மை பன்மை மறுத்திடவும் வழிகோலியது.
பக்தியின் பெயரினால் பிழைப்பு ஓட்டும் மதக்காவலர்கள் செய்யும் அராஜகம் ஒருபுறம் இருக்க அறிவியல் பக்தியில் மேற்கொள்ளப்படும் அக்கிரமங்கள் மறுபுறம் இவ்வுலகை ஆட்சி செய்கின்றது....
No comments:
Post a Comment