உதாரணமாக ஒரு நட்சத்திரத்தை எடுத்துக்கொண்டால் அது பிறக்கிறது தொடர்ந்து வளர்த்து ஒளிவீசுகிறது பின் சுருங்கி ஒளிமங்கி இறக்கிறது. அதனைதொடர்ந்து வெண்துளையாகவும் பின் கருந்துளையாகவும் மாறுகிறது. இறுதியாக தன்னை சூழவுள்ள அனைத்தையும் தன் சார்பாக உள்ளீர்துக்கொள்கின்றது.
ஒவ்வொரு பிரபஞ்சக் கூறும் ஏதோவொரு தனித்துவ ஆற்றலைக்கொண்டே ஆக்கப்பட்டுள்ளது. அவற்றுக்கு ஒரு பணியும் கொடுக்கப்பட்டு இருக்கும். அப்பணிக்காகவே அது காத்திருகிறது. காலம், சூழ்நிலை தானாகவே அத்துணிக்கையின் பணியை தொடக்கிவைக்கும். அதுவரை சுயாதீனமாக சிலவேளை இயக்கமற்றும் காணப்பட்ட அத்துணிக்கை அதியுயர் மீடிறனுடன் அதிர்வடைந்து அசைய எத்தனிக்கும். இதுவே அத்துணிக்கையின் தருணம்.
சடப்பொருளைப் போன்றே உயிர்களும் குறித்த பிரபஞ்ச இயங்குகை தளத்தை வெளிக்காட்டியே ஆகவேண்டியது நிர்பந்தம். ஒவ்வொரு மனிதனும் ஒரு நட்சத்திரத்தின் வாழ்கையை ஒத்த வாழ்வியலையே காண்பிக்கின்றான். ஆனால் நட்சத்திரத்தின் பருமன், தான் உள்ளக்கிய ஆற்றல் என்பவற்றை பொறுத்து பிரபஞ்சத்தில் தொடர்ச்சியான நிலைதிருப்பை மரணித்தும் நிலைநாட்டுவதே அவனது வாழ்வின் உண்மையான இலக்காகும்...
சிலர் தன்னளவிலும், இன்னும் சில தன் சார்ந்த குடும்பம் அளவிலும் வெகு குறைவான சிலர் தன் சார்ந்த சமூக சூழல் அளவிலும் தான்வாழ்ந்த அடையாளத்தை பதிக்கின்றார்கள் இறந்தும் கருந்துளையாக வாழும் நட்சத்திரங்களை போன்று...
No comments:
Post a Comment