
கடந்த இரு தினங்களாக இலங்கை நாட்டில் வடக்கு, வடமேல், மேல் மாகாணங்களில் காற்றில் தூசு துணிக்கைகள் (Smog) அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் (National Building Research Organisation – NBRO) மற்றும் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரித்துள்ளன.
கடந்த இரு தினங்களில் வளி தர குறியீடு (Air Quality Index (AQI) 150 – 200 வரை காணப்பட்டுள்ளது. இது சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் அளவாகும். (See the Table). இதற்கு உடனடி காரணமாக காற்றோட்டாரத்தில் ஏற்பட்ட மாற்றத்தினால் இந்தியா Delhi யை சூழ்ந்திருக்கும் தூசுப்படலம் இலங்கைக்கு வருவது மற்றும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள காரணிகளும் அடங்கும்.
தூசுகள் பொதுவாக PM2.5 ஐ (particulate matter 2.5 micrometers) விட அதிகரிக்கும்போது பாதிப்புகள் அதிகரிப்பதோடு வெற்று கண்களுக்கும் தென்படும்.
#வளி_மாசாக்கிகளும்_காரணங்களும்
👉 தூசு துகள்கள்:- அதிகரித்த வாகனப்பாவனை, வெப்பமான காலநிலை, சரியாக பேணப்படாத வீதிகள் மூலம் கிளம்பும் புழுதி.
👉 நகரத்தை அண்மித்த பகுதிகளில் காணப்படும் ஆலைகள், தொழிச்சாலைகள், கட்டட நிர்மாணப்பணிகளில் (கட்டுதல், உடைத்தல்) இருந்து வெளியாகும் தூசு துகள்கள்.
👉 காபனீர் ஒட்ஸைட்டு (CO2) :- வாகன எரிபொருள் பாவனை, குறை தகனம் எனும் விறகில் சமைத்தல், மண்ணெண்ணெய் பாவனை, கரிய புகை வெளியாகும் எரித்தல் செயற்பாடு, அனல் மின்நிலையம்
👉 கந்தக ஒக்சைடுகள்: SO2:-
நிலக்கரியும் பெற்ரோலும் பெரும்பாலும் கந்தக சேர்மங்களைக் கொண்டுள்ளன.
தொழிற்சாலைகளில் பாவிக்கும் செறிவாக்கிகள், சூழலுக்கு வீசப்படும் பாவித்த Battery கள்.
👉 நைட்ரசன் ஒக்சைடுகள் NO2:
பெரிய மின் உற்பத்தி நிலையங்கள், வெடி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகள், உரத் தொழிற்சாலைகள் போன்றவை இவ்வகை வாயுக்களை அதிக அளவில் வெளியிடுகின்றன.
👉 கார்பன் மோனாக்சைடு: CO:-
இயற்கை எரிவாயு, நிலக்கரி அல்லது மர எரிபொருள்கள் எரியும் போது இவ்வாயு உற்பத்தியாகிறது. 80% மோட்டார் வாகனங்கள் எரிபொருளை அரைகுறையாக எரித்து வெளியிடும் புகையில் இவ்வாயு காற்றில் கலந்து அதை மாசுபடுத்துகிறது, சிகரெட் புகைத்தலின்போதும் இவ்வாயு வெளியேறும்.
👉 மீத்தேன் CH4:-
இது எரிவாயுவாக பயன்படக்கூடிய ஒன்று. இது வெறுமனே சூழலில் சேரும்போது வளி மாசடையும். குப்பை கூளங்கள் ஒன்றாக குவிக்கப்பட்டு (குப்பை மேடு) காற்றின்றிய நிலையில் உக்கும்போது இது உருவாகும்.
👉 ஐதரசன் புளோரைடு: HF:-
அலுமினியம் மற்றும் இரசாயனங்கள் தயாரிக்கும் தொழிசாலைகளில் இருந்து பெருமளவில் இவ்வாயு வெளியிடப்படுகிறது.
👉 ஐதரசன் சல்பைடு: H2S:-
இவ்வாயுவை பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையங்கள் பெருமளவில் வெளியிடுகின்றன.
#வளி_மாசடைவதால்_ஏற்படும்_சுகாதார_பாதிப்பு
2014 உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, 2012 இல் ஏற்பட்ட காற்று மாசுபாடு காரணமாக உலகெங்கிலும் 7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளனர். வளி மாசடைதலின் பாதிப்பு ஒருவரில் அவர் எவ்வளவு காலம் மாசடைந்த சூழலில் வாழுகின்றார் என்பதிலும் வளி மாசடைந்த அளவிலும் தங்கி உள்ளது. மேலும் ஒவ்வொரு மனிதனினதும் பரம்பரைக் காரணிகள் ஏனைய உடற்றொழியில் காரணிகளான உடற்பருமன், ஏனைய உடல்நோய் நிலைகளிலும் தங்கி இருக்கும்.
மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் உடனடி விளைவாக
👉 மூச்சு திணறல், இருமல், கண் எரிச்சல், தோல் அழற்சி ஏற்படலாம்.
👉 சுவாச நோய்கள் (Asthma, COPD) உள்ளவர்களுக்கு நோய்நிலைமை முற்றி மரணமும் சம்பவிக்கலாம்.
👉 மாசடைந்த சூழலில் வாழும் குழந்தைகள் வளர்ந்தபின் அவர்களின் சுவாசப்பைகளின் செயற்றிறன் ஆரோக்கியமானவர்களை விட நான்கு மடங்கு குறையும். இவர்கள் பருமனாக இருப்பின் NO2, PM10 என்பவற்றின் மேலதிக பாதிப்புக்களால் நீரிழிவு நோய் ஏற்படும் தன்மையும் அதிகம்.
👉 வாகனப்புகையின் தாக்கத்தினால் குறிப்பாக PM2.5 இனால் மூளையின் கனவளவு குறைவடைவது, சிறுவர்களில் சுவாசநாடியின் குருதி அமுக்கம் Pulmonary Arterial Pressure அதிகரிக்கக் காரணமாக அமைகின்றது. NO2, PM10 களினால் குருதி அமுக்கம் Diastolic blood Pressure அதிகரிக்கக் காரணமாக அமைகின்றது.
👉 நீண்டகால தூசுக்களை உள்ளெடுத்தலால் Artheroselerosis ஏற்படும். இது இளவயதில் குறிப்பாக 30-40 வயதில் மாரடைப்பு, பாரிசவாதம், இதயச் செயலிழப்பிற்கு காரணமாக அமைகின்றது.
👉 கர்ப்பிணிப் பெண்கள் வாகனப்புகையினை சுவாசிப்பதனால் அவர்களின் குழந்தைகளுக்கு Lymphocytic Leukemia, Retinoblastoma போன்ற புற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
👉 SO2, NO2 மாசினால் அமிலமழை பொழிந்து தோல் நோய்கள் உருவாக வாய்ப்புள்ளது.
👉 கார்பன் மோனாக்சைடு: CO கொடிய நச்சுத்தன்மை வாய்ந்த இவ்வாயுவை சுவாசித்தால் தலைவலி, கண்பார்வை பாதிப்பு, பக்கவாதம், செயலின்மை போன்ற நோய்கள் தோன்றுகின்றன. இதனால் சுவாசம் பாதிக்கப்பட்டு மரணமே கூட நிகழலாம்.
👉 பென்சோபைரீன் என்ற ஐதரோகார்பன் சிகரெட் புகையில் உள்ளது. இது நுரையீரல் புற்று நோயை உண்டாக்குகிறது.
👉 ஐதரசன் புளோரைடு: HF இவ்வாயு கலந்த காற்று சுவாசிக்கப்பட்டால் மூச்சுக்குழல் பாதிக்கப்படுவதோடு எலும்பு, பற்களும் பாதிக்கப்படுகின்றன. மேலும் இவ்வாயு தாவரங்களையும் பாதிக்கிறது.
👉 ஐதரசன் சல்பைடு: H2S:- சுவாச நோய், பக்கவாதம் போன்ற நோய்களுக்கு இவ்வாயு காரணமாகிறது. சாயங்களை அரிக்கும் தன்மையும் கொண்டுள்ளது.
#ஆபத்துகளை_குறைக்கும்_வழிமுறைகள்
👉 Air Quality Index AQI அதிகரித்து ஆபத்தான நிலைமைகளில் சன நெரிசல் , வாகன நெரிசல் உள்ள இடங்களை தவிர்த்தல் மற்றும் முகமூடி (Face Mask) பாவித்தல் High Risk Groups
1. சுவாச நோயுள்ளவர்கள்
2. இருதய நோயாளர்கள்
3. கற்பிணி தாய்மார்
4. சிறுவர்கள், வயதானவர்கள்.
மாசுபாடு அதிகம் உள்ள இடங்களில் வெளிக்கள, வேலையாளர்கள், உடற்பயிற்சியில் ஈடுபடுவோர் போதிய ஓய்வை பெற்றுக்கொள்ளல்.
👉 அதிக புகை வெளிவிடும் வாகனங்களை கட்டுப்படுத்தல்:- (Strict Emmission Control , Promote Hybrid Vehicles , Electrict Vehicle? but Coal power production )
👉 நிலக்கரி பாவித்து உற்பத்தி செய்யும் அனல் மின் உற்பத்திக்கு மாற்று வழிமுறைகளை அறிமுகப்படுத்தல் ( நீர் மின் உற்பத்தியை அதிகரித்தல், சூரிய சக்தி மின் உற்பத்தி, காற்றாலை, கடலலை மின் உற்பத்தி )
👉 பொது போக்குவரத்து சேவையை (Public Transport Service) மேம்படுத்துவதன் மூலம் தேவையற்ற வாகனப் பாவனையை குறைத்தல்.
👉 வீடுகள், கட்டடங்கள் நிர்மாணிக்கும்போது போதுமான காற்றோட்டத்தை பேணல். (Ventilation)
👉 தொழிற்சாலை கழிவுகள் தொடர்பில் இறுக்கமான சட்டங்களை கொண்டுவந்து அமுல்படுத்தல்.
👉 Air Quality Index AQI அதிகரித்த ஆபத்தான நிலைமைகளில் பாடசாலைகளை தற்காலிகமாக மூடல்.
👉 பிரதான வீதிகளுக்கு அருகாமையில் வசிப்போர், வேலை செய்வோர் அதிக அளவில் வளி மாசடைதலினால் பாதிக்கப்படுகின்றனர். ஆபத்தான காலங்களில் முகமூடிகளை பாவித்தல்.
👉 மாற்று எரிபொருட்களைப் பயன்படுத்தல், தேவையற்ற வாகனப் பாவனையை குறைத்தல்.
👉 உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சைக்கிள்கள் பாவனையை ஊக்குவித்தல்.
👉 புகையிலை புகைத்தலை கட்டுப்படுத்தல், பொதுவெளியில் புகைப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொளல்
👉 கட்டுமானப் பணிகளின்போது வெளியாகும் மாசுத் துகள்களைக் கட்டுப்படுத்தும் விஷயத்தில் தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகள் எடுக்கப்பட வேண்டும்.
👉 வளி மாசடைதல் பற்றிய சமூக ரீதியில் விழிப்புணர்வு கல்வி புகட்டப்படல் வேண்டும். வளி மாசடையாது இருப்பதற்கான மாற்றுவழிகளை ஊக்குவிக்க வேண்டும்.
No comments:
Post a Comment