Mutur JMI

𝙅𝙪𝙣𝙖𝙞𝙙 𝙈𝙤𝙝𝙖𝙢𝙚𝙙 𝙄𝙝𝙨𝙝𝙖𝙣 𝐀𝐮𝐭𝐡𝐨𝐫 | 𝐏𝐮𝐛𝐥𝐢𝐬𝐡𝐞𝐫 | 𝐖𝐫𝐢𝐭𝐞𝐫 | 𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐞 𝐉𝐨𝐮𝐫𝐧𝐚𝐥𝐢𝐬𝐭 👉 𝙒𝙚𝙗𝙨𝙞𝙩𝙚 – www.jmi-mutur.com 👉 𝙈𝙖𝙞𝙡 – ihshanjm@gmail.com 👉 𝙁𝙖𝙘𝙚𝙗𝙤𝙤𝙠 – Ihshan J.M.I Mohamed - www.facebook.com/JMI.Ihshan 👉 𝙁𝙗 𝙥𝙖𝙜𝙚 Professional - Mutur JMI – www.facebook.com/IhshanJMI Personal - Ihshan JMI – www.facebook.com/MuturJMI 👉 𝙄𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢 – Ihshan JMI - www.instagram.com/ihshan_jmi 👉 Contact 0771020030

Business

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, November 11, 2019

இலங்கை அரசியல் களத்தில் NPP in வகிபாகம்...

Image may contain: 1 person, text
அன்னியராட்சிக்கு எதிரான போராட்டத்தின் பின்னரான சுதந்திர இலங்கை கடந்த #ஏழு_தசாப்த அரசியல் பயணத்தில் மக்கள் அனுபவித்த ஆனுகூலங்களிலும் பார்க்க அரசியல்வாதிகள் பெற்றுக்கொண்ட அருட்கொடைகள் எண்ணிலடங்கா!!!!
உள்நாட்டு யுத்தத்தின் பின்னரான உண்மை சுதந்திரத்தை சில ஆண்டுகளும் நுகரமுடியாத இலங்கை மக்களும் மண்ணும் அரசியல்வாதிகளிடத்தில் தங்களின் சிறைக்கூண்டுச் சாவிகளை அடமானம் வைத்துவிட்டோம் என்ற அடிமை வாழ்வியல் போக்கு இனியும் வேண்டாம் என்ற மனோபாவம் இன்றைய மக்கள் மன்றத்தில் ஒப்புவிக்கப்பட்டுள்ளத்தை உணரமுடிகின்றது.
பண்டிதன் தொடக்கம் பாமரன் வரை....
அரசியல் ஆடையில் இன்பமுற்ற பேர்வழி முதலைகள் கூடாரத்தில் எம்தலைவிதி நிர்ணயம் செய்யப்பட்டு இரட்டை தீர்வுகளில் கண்டிப்பாக ஒன்றை தேர்வுசெய்யவேண்டிய பாரம்பரிய கலாசாரம் இனியும் இராது என்ற சூழல் இன்று தோற்றம் பெற்றுள்ளமை குறித்து நாம் ஒருபுறம் அகமகிழ்வு கொண்டபோதும் இனிவரும் அரசியல் களம் குறித்து குறிப்பாக சிறுபான்மை சமூகம் மிக நீண்ட கலந்துரையாடல் மற்றும் விமர்சன ரீதியான மீள்வாசிப்பு செய்வதும் கடமையாகியுள்ளது. இதுவரை நடைமுறையில் இருந்த #இரட்டை_தேர்வு இம்முறை #மும்மை_தேர்வு_முறையாக மறுமலர்ச்சி கண்டுள்ளபோதும் அதன் தாக்கம் அரசியல் மேட்டுக்குடிகள் மட்டத்தில் ஒரு பீதியையும் நடுக்கத்தையும் உண்டாக்கியுள்ளது என்பதுமட்டும் தெளிவாக அவதானிக்க முடிகின்றது.

இங்கே நாம் பரிசீலிக்க வேண்டியது வாய்ப்பு முறைமையை குறித்தே தவிர இதுவரை களம் கொடுக்கப்படமால் வெளிக்கட்டபட்ட முகத்தை அல்ல!!!!!
தெளிவாக கூறினால்....
இலங்கை அரசியல் களத்தில் குறிப்பாக ஜனாதிபதி வேற்பாளர் விடயத்தில் புரட்சிகர மாற்றத்தை நோக்கி முன்னெடுப்பு மேற்கொள்ளும் NPP (National People's Power) கட்சியின் உள்ளாக ஆலனித்துவம் மற்றும் கொள்கை ரீதியான நேர்கொண்ட பார்வை என்பன தெளிவான எண்ணக்கருவை பொதுமக்கள் அவையில் பதித்துவருகின்றது. இதுவரை காலமும் JVP என்ற தனித்துவ அடையலாம் இனிவரும் காலங்களில் ஜேவிபியுடன் கூட்டுச்சேர்ந்து உருவாகியுள்ள கூட்டுப்படை NPP என்பதும் இலங்கை அரசியல் வகிபாகத்தில் என்ன நிலைப்பாட்டை கொண்டுள்ளது என்பது குறித்து மக்கள் இன்னும் தெளிவற்றே உள்ளார்கள். குறிப்பாக #கொள்கை_பிரகடனம் மற்றும் அது தாக்கமளிக்கும் வழிமுறை மற்றும் மறுமலர்ச்சி பற்றிய எண்ணக்கருவை புதிய தலைமுறை மனங்களில் பதிவிற்குவேண்டிய தேவையை மாற்றத்தை நோக்கி நகரும் மக்கள் தங்களின் அற்பணிப்பாக மேற்கொள்வது கடமையாகும்.

கடந்த காலங்களில் அல்லாமல் புதிய தலைமுறையின் சிந்தனா ரீதியான மனோமாற்றம் எதிர்கால அரசியல் களத்தில் ஒரு பாரிய திருப்பத்தை உண்டாக்கும். அடுத்து நடைபெறவுள்ள களத்தில் NPP சார்பாக களம் இருங்கும் வேற்பாளர் வெற்றிபெறுவது ஒருபுறம் ஐயத்தில் இருந்தபோதும் #வெற்றிபெற்றால்_நாட்டின்_ஆட்சியமைப்பு குறிப்பாக பாராளுமன்ற மற்றும் மாகாண உள்ளூராட்சி அரசியல் கட்டமைப்பில் நடைமுறை சாத்தியங்களை பற்றிய அவதானத்தை பற்றியே நாங்கள் தற்போது யோசிக்கவேண்டிய தேவை எழுந்துள்ளது.
இலங்கை அரசியல் கலாசாரத்தில் பலமானதும் நிலைபேறான அரசியல் கொள்கை பகுப்பும் கொண்ட மூன்றாவது எதிரணியின் அறிமுகம் பழைய அரசியல் கலாசாரத்தில் ஊறிய பெரும் அரசியல் கட்சியும் அதனை சார்ந்த தோழமைகளிடத்திலும் மட்டுமன்றி எதிர்நோக்கவிருக்கும் அரசியல் புதிய ஆட்சியில் பாரியதொரு #நேர்_விளைவை கல்வி, உற்பத்தி, பொருளாதாரம் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு அபிவிருத்திக்கொள்கையில் உண்டுபண்ணும் என்பதில் ஐயமில்லை.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages