
2. அளவுக்கு மீறிய அன்பு, மரியாதையும், கௌரவத்தையும் உங்கள் தலைவர்களுக்கு அளிக்காதீர்கள். சிலவேளைகள் அது முகஸ்துதியாக நடிக்க உங்களை தூண்டலாம். சில தருணங்களில் உங்கள் அன்பு வெறுப்புணர்வாகி துரோகமிழைக்கவும் கூடலாம்.
3. கட்சியின் தலைமைகள் உங்களை சார்ந்த ஆதரவாளர்கள், பற்றாளர்கள், தொண்டர்கள் விடயத்தில் கூடிய கவனம் செலுத்துங்கள். ஏனெனில் உங்கள் ஆதரவாளர்கள் மூலாமாக உங்கள் மேல் மக்கள் கொண்டுள்ள நல்லபிப்பிராயம் இழக்கப்படலாம். அத்தோடு அவர்களுக்கான மரியாதை, கண்ணியத்தை பூரணமாக அளிக்க முயற்சியுங்கள்.
4. சமூக ஊடகங்களில் உங்கள் ஆதரவை வெளிப்படுத்த பூரண உரிமை உண்டு என்பதனால் அதனை அத்துமீறி துஸ்பிரயோகம் செய்யாதீர்கள். சிலவேளை மக்கள் வெறுப்படைவார்கள்.
5. அறிவார்ந்த சாத்தியப்பாடான சொல், செயல், வாக்குறுதிகளை வழங்குகள். அது சமூகத்தின் நீண்டகால இருப்பை உறுதிப்படுத்துவதாய் அமைதல் நன்று.
6. விமர்சங்களை முறையாக முன்வையுங்கள். வீண் இட்டுக்கட்டல்கள், பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பழிதீர்த்துக்கொள்ள முயற்சிக்காதீர்கள். மீண்டும் அது உங்களை நோக்கி பாய முற்படும்.
7. கடந்தகால கசப்பான சம்பவங்களையும், தனிமனித சூழ்நிலை தவறுகளை கண்டுகொள்ளாதீர்கள். முடியுமானவரை நல்லதை ஆதரியுங்கள். தவறுகளை புரியும்படியாக முறையாக சுட்டிக்காட்டுங்கள்.
8. அரசியல் நடுநிலை என்பது உண்மையின் பக்கம் நிற்பதனை குறிக்கும். இங்கே சுயநலங்கள் துறந்த மனோநிலை வேண்டும். நம்பிக்கையோடு நடவுங்கள். இல்லையேல் நன்றியுணர்வோடு நீங்களாகவே விலகிவிடுங்கள்.
9. அரசியலில் இலாபங்கள், எதிபார்ப்பு கொண்டு சேவைகள், பணிகள் செய்யாதீர்கள். அது உங்களை சோர்வுற செய்வதோடு சமூக அரங்கில் அவமானப்படுத்திவிடும்.
10. களத்தில் நிற்பவர்கள் உங்கள் அடிமட்ட தொண்டர்களுடன்; தொண்டர்கள் உங்கள் எதிராளி விமர்சங்களை திறந்த மனதோடு உணர்சிவசப்படமால் கிரகித்துக்கொள்ள முயற்சியுங்கள். ஒருவேளை நீங்கள் விடும் தவறுகளை அது உணர்த்த வழிவகுக்கலாம்.
அரசியல் தலைவர்கள் இப்பதிவை வாசிக்க சந்தர்பம் குறைவுதான். இருந்தாலும் வாசிப்பவர்கள் நாளை அரசியல் தலைவர்களாக ஆகலாம் அல்லவா!!!!
வாழ்த்துகள்
No comments:
Post a Comment