பாரம்பரிய அரசியல் கட்சிகள் மற்றும் ஆயுள்கால தலைமைபீடங்கள் தொடர்ந்துவரும் காலங்களில் மறுசீரமைப்பு மீள்கட்டுமானத்தை பற்றி அதிக கவனம் செலுத்துவது மட்டுமன்றி தங்கள் சார்பான இளைஞர் குழுமங்களை வலுப்படுத்துவதோடு விஸ்தீரணம் செய்யும் அத்தியாவசிய நிலைப்பாடுகள் பற்றியும் மீள்வாசிப்பு செய்வதுவே ஒரே தீர்வு என்று எதிர்நோக்கவிருக்கும் இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் சாட்சி பயக்கலாம்...
ஒருபுறும் சமூகத்தை அழித்தொழிக்கும் போதைபொருள் கலாசாரமாக இருக்கட்டும் இளைஞர்கள் எதிர்நோக்கும் வேலையில்லா பிரச்சினையாகவிருக்கட்டும் ஒட்டுமொத்தத்தில் புதிய தலைமுறையின் பாரிய வெற்றிடத்தை இந்த அரசியல் ரீதியான ஆரோக்கியமான நீண்டகால நிலைபேரியல் அபிவிருத்திகள் மூலமாக மாத்திரமே விடையளிக்கலாம்.
இந்த எண்ணக்கருவை கொண்டு...
இன்றுள்ள பாரம்பரிய அரசியல் கட்சிகளின் மேட்டுக்குடிகளாக தங்களை அடையாளம் காட்டும் சமூக சூழ்நிலை தொடக்கம் தற்கால விளம்பர நிலவரம் அறியாத சுயநலமிக்க மூத்த போராளிகளின் ஆதிக்கம் மேலோங்கியதன் விளைவு சமூகமட்டத்தில் அடுத்த தலைமைபீட வகிபாகதிற்கு உரிமையான இளைஞர்கள் ஒதுங்கிநிற்க நேரடி தூண்டுகோலாகின்றது.
எனவே அரசியல் ரீதியான எதிர்கால இஸ்தீரனத்தை வலுப்படுத்த சிந்திக்கும் கட்சிகள் முதலில் தங்கள் பாரம்பரிய கொள்கை பரப்பில் மறுசீரமைப்பை ஏற்படுத்துவதோடு மாத்திரமன்றி துறைசார் நிபுணத்துவத்தை வளர்த்த, வளர்கின்ற அதற்கு ஆயத்தமாகவுள்ள புதிய தலைமுறையின் ஆலணித்துவ எண்ணிக்கையை அதிகரிப்பது பற்றிய முதற்கட்ட நடவடிக்கையை மேற்கொள்வது அவசியம்...
No comments:
Post a Comment