
அவை முறையான விதத்தில் நடைபெறவில்லை. தற்போது அது தொடர்பான வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அது குறித்து அதிகம் கதைக்கமுடியாது. எனினும் நாம் அமைச்சு பதவியை பொறுப்பேற்கும் போது, இந்திய எண்ணெய் நிறுவனமே எண்ணெய் குதங்களை பயன்படுத்தி வந்தது.
15 எண்ணெய் குதங்களை அந்த நிறுவனம் தற்போது பயன்படுத்தி வருகின்றது. எனினும் ஏனைய 18 எண்ணெய் குதங்கள் துருபிடித்து வருகின்றன. இதனை புனரமைப்பதற்கு இதுவரை யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில், அவற்றை அபிவிருத்தி செய்யவதற்கு அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்துள்ளேன். திருகோணமலை எண்ணெய் குதங்கள் அமைந்துள்ள காணியின் உரிமை ஸ்ரீலங்கா அரசாங்கத்தினுடையது. அதில் 100 எண்ணெய் குதங்கள் உள்ளன. அதற்கமைய குறித்த அமைச்சரவை பத்திரத்தில் சில விடயங்களை குறிப்பிட்டுள்ளேன். அதில் முதலாவதாக எண்ணெய் குதங்கள் அமைந்துள்ள காணியின் உரிமைகளை ஸ்ரீலங்கா அரசு வைத்துக்கொண்டு புதிய ஒப்பந்தமொன்றுக்கு செல்ல வேண்டு்ம். இரண்டாவது, தற்போது இந்திய எண்ணெய் நிறுவனத்தால் பயன்படுத்தப்படும் 15 தாங்கிகளை அவரகளுக்கே பெற்றுக்கொடுக்க வேண்டும்.
மூன்றாவதாக, ஏனைய எண்ணெய் தாங்கிகளை இந்திய எண்ணெய் நிறுவனம் மற்றும் சிறிலங்கா எரிபொருள் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து உருவாக்கப்படும் பொது நிறுவனமொன்றுக்கு அபிவிருத்தி செய்வதற்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன். அத்துடன், 85 எரிபொருள் தாங்கிகளில் 16 தாங்கிகளை சிறிலங்கா எரிபொருள் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கும் யோசனையும் குறித்த அமைச்சரவை பத்திரத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இவ்வெண்ணெய்க் கிணறுகள் காணப்படும் இந்த பெரும் காட்டினுள்ளே யானைகள், காட்டு பன்றி, மான், மரை, நரி, கரடி, பலவகை குரங்குகள்,மயில் ,நச்சு பாம்புகள் மற்றும் மலைபாம்புகள் போன்ற உயிரினங்கள் இன்றும் உள்ளன. இப்போது, இதின் ஆதிக்கம் இந்தியா வசம் உள்ளது. ஆனாலும், அமரிக்காவுக்கும் இதில் ஒரு கண் உள்ளது.
இது திருகோணமலையின் உட்துறைமுகத்துடன் தொடர்புடையது. இந்த துறைமுகத்தினுள் சுமார் 400 பெரிய கப்பல்களை வெளியாருக்கு தெரியாமல் ஒழித்து வைக்கமுடியும். இந்த வசதி உலக மஹா யுத்ததின்போது பெரிதும் பயன்பட்டது.
இந்தியாவின் இருபக்கங்களில் இருக்கும் நாடுகள் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் செல்லுவதற்கு இலங்கையை சுற்றிதான் செல்லவேண்டும். அதன்போது அவற்றுக்கு தேவையான எண்னை, தண்னீர் மற்றும் பழுதுபார்கும் தேவைகளுக்கு இலங்கை ஒரு முக்கியமான இடமாகும். மேற்கூறிய காரணங்களின் அடிப்படையில் இலங்கையும் திருகோணமலையின் இயற்கை துறைமுகமும் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றதுடன் வல்லரசுகளின் கழுகுப்பார்வையில் ஒரு முக்கிய இடத்தை பெற்றுள்ளது.
No comments:
Post a Comment