பெண்ணுடல் மதத்தினும் இனத்தினும் இன்னும் சமூகத்தினதும் புனித பாண்டம் என்ற சிந்தனை வறட்சிக் கண்ணோட்டத்தின் விளைவுதான் ஒரு சமூகத்தின் அல்லது ஒரு தரப்பாரின் பெண்ணுடலை அசிங்கமாக துன்புறுத்தி அச்சமூகத்தை அவமானப்படுத்தியதான கௌரவ இழுக்கை உண்டாக்கிய மமதை மேலிடத் தொடங்குகின்றது.
வரலாற்றின் நெடுகிலும் குறிப்பாக யுத்தங்களில் இந்த பெண்வதைக் கலாசாரம் தொடர்ந்து வந்துள்ளது. இந்த கலாசாரம் உண்மையில் ஆணாதிக்க அடக்குமுறையை சார்ந்த உளவியல் மற்றும் உடலியல் பண்பென்ற அறிவாண்மையை எமது சமூகதின் பொதுப்புத்தி ஆமோதிப்பு ஏற்க மறுப்பதுதான் வேடிக்கை.
யுத்தக்களிப்பு தொடக்கம் பழிவாங்கல் பிடிவாத மனோவியல் வரை; எச்சங்களாக எஞ்சி இருப்பது பெண்ணுடல் வதையின் மீதங்கள் மட்டுமே. நாகரீக் வளர்ச்சியில் ஆடை கலாசாரத்தின் விளைவு ஆண், பெண் பாலினத்தின் பாலியல் உறுப்பின் மூடுதல் மீதான இராட்சத தோற்ற விம்பத்தை சமூக அரங்கில் உண்டாக்கி பல்காலமாகிட்டு. புவியின் சக விலங்குகள் போல் மனிதனும் ஆடையணியா தோல்லுடல் தேகத்தோடு வாழப்பழகி இருந்து இருந்தால் ஒருவேளை ஆணாதிக்கமாகவும் அவமானத்தின் சின்னமாகவும் கருதப்படும் பெண்ணுடல் வதை கலாசாரம் இல்லாமல் இருந்திருக்குமோ????
No comments:
Post a Comment