
நூலாசிரியர் - Robert Knox
வெளியீடு - 18.03.1681
ஆங்கிலேயரான இவர் கப்பல் மாலுமியின் மகனாவார். தந்தைக்குச் சொந்தமான கப்பலில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டார். இந்தியாவிலிருந்து 1660 ல் பாரசீகம் நோக்கி பயணித்த வேளை "ANN" என்ற கப்பல் புயலில் சிக்கி திருகோணமலை கொட்டியாரக் குடாவை வந்தடைந்த்து. அப்போது மூதூர் கொட்டியாபுரம் கண்டி மன்னரின் ஆட்சிக்குட்பட்ட துறைமுகமாக இருந்தது. மூதூர் கொட்டியாபுரப்பற்றில் தடம் பதித்த ஐரோப்பிய மாலுமி Robert Knox ஆவார். இங்கிலாந்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.
பிறப்பு:08.02.1641, இறப்பு:19.06.1720, 1660.11.19 ல் கொட்டியாபுரப்பற்று மூதூரில் கண்டி மன்னனால் கைது செய்யப்பட்டு புளியமரத்தின் கீழ் 20 நாட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டார். மூதூரில் இருந்த காலத்தில் மாமிச உணவுகள், தேன், கிழங்கு வகைகள் போன்ற உணவுகள் வழங்கப்பட்டு நன்கு உபசரிக்கப்பட்டனர்.

அந்த புளியமரத்தின் நினைவாக இன்றும் மூதூர் மத்திய கல்லூரி க்கு அருகாமையில் உள்ள புளியமரத்தின் கீழ் அவரின் பெயர் பொறிக்கப்பட்ட நினைவுக் கல் ஒன்று உள்ளது. இக் கல் 1893 இல் வைக்கப்பட்டது. காலப்போக்கில் புளியமரம் சிதைவந்து போக மிகுதி கிளை 4'x4' அளவுள்ள 18 அடி உயரமான தூண் கட்டப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தது.
1957 மூதூரில் வீசிய புயல் காரணமாக எஞ்சிய கிளையும் முற்றாக சேதமுற்றது. இக்கிளையின் ஒரு பகுதி இலங்கை நூதனசாலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இப் புளிய மரத்தின் நினைவாக 1960 ல் தற்போதுள்ள புளியமரம் நடப்பட்டது.

இவரின் தந்தை பண்டார கொஸ்வத்த எனுமிடத்தில் மலேரியா நோய் காரணமாக இறந்த போது தனது கையினால் குழி தோண்டிப் புதைத்துள்ளார். தனது தந்தை இறந்த பின் கண்டி பிரதேசத்தின் "உடுநுவர எலதெத்த" எனுமிடத்தில் விவசாயம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். அத்துடன் புகையிலை, மற்றும் மீன்பிடி தொழில்களில் ஈடுபட்டதுடன் பண்டமாற்று வியாபாரத்திலும் ஈடுபட்டுள்ளார். இக் காட்சியினை ஓவியமாகவும் வரைந்துள்ளார்.
ஏனைய ஆங்கிலேய பணியாளர்கள் இங்கேயே திருமணம் முடித்து வாழ்ந்தார்கள். ஆனால் Robert Knox தனது தாய்நாட்டிற்குச் செல்வதில் உறுதியாக இருந்தார். 1680 ல் றொபர்ட் நொக்ஸ் இலங்கையிலிருந்து இங்கிலாந்து சென்றார். 19 வயதில் கைதியாக பிடிபட்ட இவர் சுமார் 19 ஆண்டுகள் தனது இளமைக்காலத்தை காடுகளிலும்,அரசனுக்கு ஒழிந்தும் வாழ்ந்த தனது சோக அனுபவங்களை புத்தகமாக எழுதி 18.03.1681 ல் வெளியிட்டார். இந்நூல் உலகப்பிரசித்தி பெற்ற நூலாகும்.இது இப்போதும் லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ளது. ஆங்கிலேயர்கள் இலங்கைகையைக் கைப்பற்றுவதற்கு இந்நூலே பிரதான காரணமாக திகழ்ந்தது.
(Written by - Kms Mutur Bisry sir)

மேலதிக_குறிப்பு
சுமார் 400 வாருடங்களுக்கு முன்னால் நமது மூதாதைகள் இந்த மண்ணில் சுதந்திரப் போராட்டத்தை நடாத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர். பிரித்தானியர் எப்படியேனும் இலங்கையை கைப்பற்றிவிட வேண்டும் என தருணம் பார்த்துக்கொண்டு இருந்த போது பிரித்தானியாவின் கிழக்கிந்தியக் கம்பனிக்கு சொந்தமான ANN என்ற கப்பல் கொட்டியாரக்குடாவுக்கு வந்து இந்திய விற்பனைப்பிரதிநிதிகளையும் பொருள்களையும் மூதூர்கரையில் இறக்கி விடும்.
அவர்கள் மூதூரில் உள்ள தவளம்களை(பழக்கப்பட்ட பொதி சுமக்கும் மாடுகள் )வாடகைக்கு எடுத்துக் கொண்டு மட்டக்களப்புவரை சென்று வியாபாரம் செய்வார்கள் .ஒரு முறை தாழமுக்கத்துள் சிக்கிய ANN ன் கொடிமரங்கள் எல்லாம் முறிந்து விட்டன, சில கப்பல் சிப்பந்திகள் கரையிறங்கி மரங்களை வெட்டி திருத்த வேலைகளில் ஈடுபட்டனர், இச்செய்தி மூதூர் முதலியால் கண்டி அரசனுக்கு தெரிவிக்கப்பட்டது,

அந்தக்காலத்திலேயே நாடு அந்நியரின் ஆக்கிரமிப்புக்குட்பட்டுவிடக்கூடாது என்ற தேசாபிமானத்தோடு வாழ்ந்த நம்முன்னோராகிய மூதூர் படைவீரர்கள் கப்பல் சிப்பந்திகள் கப்பலின் பாதுகாப்பு வீரர்கள் முதலானோருடன் மோதினர்,
இறுதியில் கப்பலின் கெப்டன் நொக்ஸ், அவாரது 19 வயது நிரம்பிய மகன் ரொபட் நொக்ஸ் உட்பட பலரைக்கைது செய்து கண்டிக்கு அனுப்பி வைத்தனர், அக்காலத்தில் கண்டி செல்ல ஒரு வாரம் எடுத்ததாம், அதன்பின் நடந்தவை மிகவும் சுவாரஸ்யமானவை.
No comments:
Post a Comment