
புனித அல்குர்ஆன் சத்தியமிடும் ஒவ்வொரு காரணியும் மிக உயர்ந்த தன்னளவிலான தகுதியை பெற்றுவிடுகின்றது. அந்நிலையில் போர்களத்து குதிரைகள் மீதான அத்தியாயம் ஆதியாத்தின் முதல் 6 வசனங்கள் மேற்கொள்காட்ட போதுமானது.
"மூச்சுத்திணற விரைந்து ஓடுபவற்றின் குதிரைகள் மீது சத்தியமாக; பின்னர், குளம்பை அடித்து நெருப்புப் பறக்கச் செய்பவற்றின் மீதும், பின்னர், அதிகாலையில் விரைந்து எதிரிகள் மீது பாய்ந்து செல்பவற்றின் மீதும்; மேலும், அதனால் புழுதியைக் கிளப்புகின்றவற்றின் மீதும், அப்பால் பகைப்படையின் மத்தியில் கூட்டமாக நுழைந்து செல்பவற்றின் மீதும் சத்தியமாக; நிச்சயமாக, மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கின்றான்" (அல்-குர்ஆன் 100:1~6)
மேற்படி வசனத்தினூடாக எஜமான் வேலையாளன் குறித்தான கண்ணோட்டத்தை நன்றி உணர்வுடன் தெளிவூட்ட முனைகின்றது அல்குர்ஆன். எவ்வாறு போர்களத்தில் தன் எஜமானுக்கு உறுதியாக நின்று கட்டளைக்கு முழுமையாக சிரம்பணிந்து யுத்தபலம் கொடுக்குமோ குதிரைகள் அதுபோல ஒவ்வொரு ஊழியனும் தன் எஜமானுக்கு உண்மையாக நின்று உறுதி அளிக்கவேண்டும் என்பதை சுட்டிக்காட்ட முனைகின்றது.
சமகாலத்தில் போர்கள் இடம்பெறாவிட்டாலும் தலைமைத்துவ வகிபாகம் எங்கும் எதிலும் நிறைந்துள்ளது. ஆக எல்லா மனிதர்களும் ஏதோவொரு வகையில் ஒரு தருணத்தில் நன்றியுணர்வை வெளிக்காட்டியே ஆகவேண்டிய சூழலில் அல்குர்ஆன் உதாரணம் காட்டும் குதிரைகள் போல் கட்டுப்பட்டு காயம், வலி, இழப்புகள் மற்றும் வெற்றிகள் போன்ற உணர்வுநிலையை பெற்றிட துணை நிற்பது கடமையாகும்....
No comments:
Post a Comment