அவ்வாறாயின் அதற்கான பதில் இதோ....
மின்னல் (lightning) என்றால் என்ன?
மேகத்தில்-முகில்-உறை நிலை ஏற்பட்டு பனி-நீர் அணுக்கள் உராய்வினால் மின்னூட்டம் பெறுகின்றன.இந்த மின்னூட்டம் அதிகமாகி, அதிகமான மின் அழுத்தத்தினால் மின்னேற்றம் பெற்ற எலெக்ற்றோன்கள், நேர்-எதிர் மின்னூட்டம் கொண்டு ஒரு முகிலில் இருந்து இன்னொரு முகிலுக்கு ஈர்க்கப்பட்டு பின் முகிலில் இருந்து நிலத்திற்கு மின்னூட்ட ஈர்ப்பு விசையால் செல்வது இடி- மின்னல் ஆகும்.
மின்னல் 1 Billion volts, 200,000 Amperes மின்சக்தியை கொண்டது. இதனால் பிறப்பிக்கப்படும் வெப்பம் ஒரு பொருளை உருக்கி ஆவியாக்கிவிடும். இந்நிலைமை காரணமாக மின்னல் உண்டாக்கும் சேதம் அதிகமாக உள்ளது பூமியில்.
காற்று அரிதிற்கடத்தியாக இருந்தாலும், கொஸ்மிக் கதிர்கள் மோதுவதால் அயனாக்கம் ஏற்பட்டு மின்னேற்றங்களை கடத்தும் நிலை ஏற்பட, மின்னேற்றம் ஏற்றப்பட்ட எலெக்ற்றோங்கள் பயணிக்க காற்று ஒரு வழியாகிறது. ஒரு இடத்தில் இருந்து மற்ற இடத்திற்கு செல்லும் வழியை step leader எனச் சொல்லலாம்.

மைக்கல் பரடே என்ற விஞ்ஞானி மின்னியல் சார்ந்த பல்வேறு தேற்றங்களையும் முடிவுகளையும் உலகிற்கு முன்வைத்தார். அவ்வகையில் மின்காந்த தூண்டல், நிலைமின்னியல் பற்றிய இவரின் வெளியீடுகள் இவ்வுலகில் பல்வேறு அறிவியல் புதுமைகளையும் இன்னும் மானிட பயன்பாடுமிக்க கண்டுபிடிப்புகளையும் தோற்றுவிக்க வழிகோலியது. உதாரணமாக டைனமோ, பரடே கூடு, நிலைமின் சேமிப்பு என்று பலவற்றை கூறிட முடியும்.
1836 இல் இவர் கண்டுபிடித்த பரடே கூண்டை(Faraday cage) கொண்டு ஒரு அதிசய சாகசத்தை நிகழ்த்தி காட்டினார். அது என்னவென்றால் ஒரு உலோக அறையினுள் தான் உள்ளிருந்து உலோக அறையின் வெளியோட்டை உயர் மின்னழுத்தம் வழங்கி மீண்டும் அவ்வறையில் இருந்து உயிருடன் திரும்பி வந்தார்.
இது ஒரு அறிவியல் நிகழ்வு. அதாவது அடைக்கப்பட்ட உலோகம் ஒன்றில் மின் ஏற்றங்கள் புற ஓட்டிலே பாயும். மாறாக உள்ளகத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது என்பதாகும். அதாவது அதிக மின்அழுத்தம் ஏற்படும் போது வெளியே உள்ள கடத்தும் பொருளில் பாயும் மின்னழுத்தம் ,கூண்டின் உள்ளே இருப்பவர்களை/ இருக்கும் பொருட்களை பாதிக்காது.
அத்தோடு விமானத்தின் வெளிப்பகுதியில் இறக்கையில் பொருத்தப்பட்டிருக்கும் நிலையான கம்பி (static wick) சிறிய கூர்மையான முனையுடைய சிறிய கருவி, மின்னலின் போது ஏற்படும் அதிமின் அழுத்தம் கொண்ட நிலை மின்சக்தியை (static electricity) ஈர்த்துக் கொள்ளும். விமானம் அலுமினியத்தினால் வெளிப்புறம் அமைந்துள்ளதால் சிறந்த கடத்தியாக செயல்படுவதொடு புறத்தே உயர் வெப்ப, மின்னழுத்த அதிர்ச்சியை தாங்கும் வகையில் விமானங்கள் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால் விமானத்தின் உள்ளே உள்ள பயணிகளையும், ஏனைய இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் பொருட்களும் பாதுகாக்கப்படுகிறது.
விமானத்தில் மின்னல் தாக்கம் ஏற்படுமாயின் தொடர்பாடல் மற்றும் உள்ளக பயணிகளின் உயிராப்பது மற்றும் போக்குவரத்து பாதைவழி ஏற்பவற்றில் பாரியதொரு இடையூறை விமான பயணிகள் எதிர்நோக்க வேண்டி இருந்து இருக்கும். ஆனால் அவ்வாறு நடைபெறும் வாய்ப்புகள் பரதே அறையினால் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ஆங்காங்கே சில மின்னல் தாக்கும் சம்பவங்கள் நடக்கவே செய்கின்றன.
மேற்படி அறிவியல்தான் விமானங்கள் தொடக்கம் வாகனங்கள் வரை பயன்படுத்தப்படுகின்றது. இதனால்தான் விமானங்களுக்கு மின்னல் தாக்கம் ஏற்படுவது அரிது.
No comments:
Post a Comment