பேரண்டத்தின் பருமன் முடிவில்லாதது என்கிறது இயற்பியல். நடுவே துளைகொண்ட மெதுவடையின் வடிவமாகவோ, சவர்க்கார நுரைக்குமிழியின் கோள வடிவமாகவோ, கிடையாய் விரிக்கப்பட்ட தட்டைப் பாய் போலவோ, மேல் நோக்கிய அல்லது கீழ் நோக்கிய வளைவுகொண்ட மலையேறும் சாலை போன்றோ, ஏதோவொரு வடிவத்தைப் பேரண்டம் கொண்டிருக்கலாம். அதன் வடிவம் எதுவானாலும், பருமன் முடிவிலியானது. இந்த இடத்தில் இயற்பியல் இதைச் சொல்கிறது.
“பேரண்டம் முடிவிலியானாலும், நம்மால் ஒரு குறித்த அளவுடைய அண்டப் பகுதியையே பார்க்க முடியும். அதற்கு அப்பால், எதையும் பார்க்க முடியாது. தலைகீழாக நின்றாலும், அறிவியலில் எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும் முடியாது” என்கிறது. நம்மால் பார்க்கக்கூடிய அந்த அண்டப் பகுதியை, ‘காணும் பேரண்டம்’ (Observable Universe) என்று சொல்கிறோம்.

அது, 46 பில்லியன் ஒளியாண்டுகள் ஆரையுடைய வட்டப் பிரதேசமாகும். அதாவது, பூமியை மையமாக வைத்துப் பார்த்தால், 92 பில்லியன் ஒளியாண்டுகள் விட்டமுடைய வட்டப் பகுதி. பூமி என்றில்லை, பேரண்டத்தின் எந்த இடத்தில் நின்றுகொண்டு பார்த்தாலும், அந்த இடத்தை மையமாக வைத்துக் காணக்கூடிய பேரண்டம், 92 பில்லியன் ஒளியாண்டுகளாகவே எப்போதும் இருக்கும். நியாயப்படி பார்த்தால், “அது என்ன 46 பில்லியன் ஒளியாண்டுகள் என்னும் கணக்கு?
சரி அதற்குமேல் ஏன் நம்மால் பார்க்க முடியவில்லை?
"நட்சத்திரங்கள்) ஒவ்வொன்றும் தன்னுடைய வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன" (அல்குர்ஆன் 36:40)
"தங்களுக்கு மேலிருக்கும் வானத்தை அவர்கள் கவனித்துப் பார்க்கவில்லையா? நாம் அதனை எவ்வாறு ஒரு கட்டுக்கோப்பாக அமைத்து, அதனை நட்சத்திரங்களைக் கொண்டு அலங்காரமாக்கி வைத்திருக்கின்றோம். அதில் எவ்வித வெடிப்புமில்லை. ஓட்டை உடைசலும் இல்லை!" (அல்குர்ஆன் 50:6)
No comments:
Post a Comment